பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i45 மெதுவாகத் தனது முகத்தைப் பின்புறம் திருப்பி அவ்விடத்தில் ஒருவர் வந்து நின்றதை அப்போதே உணர்ந்து கொண்டவள்போலத் திடுக்கிட்டு, உடனே தனது பாட்டை நிறுத்திவிட்டு நன்றாகப் பின் பக்கம் திரும்பி நாலைந்து கஜ துரத்தில் நின்றுகொண்டிருந்த மனிதனை உற்று.கோக்கினாள். அங்குக்காணப்பட்டமனிதர் உச்சிமுதல் உள்ளங்கால்வின்ரியில் பனாரீஸ் பட்டங்கியால் தம்மை மறைத்துக் கொண்டிருந்தார். அந்த அங்கியில் கண்களுக்காக விடப்பட்டிருந்த இரண்டு துளைகளைத் தவிர வேறு எவ்விதத் திறப்பும் காணப்பட வில்லை. அந்த அங்கிக்குள் மறைந்திருந்தவர் நிரம்பவும் பொதியாகவும் உயரமாகவும் இருப்பதாய்க் காணப்பட்டார். பூர்ணசந்திரோதயம் தனது வீணாகானத்தை நிறுத்திப் பின்புறம் திரும்பிப் பார்க்கவே அங்கிக்குள் இருந்தவர் உடனே அந்த மடந்தையை நோக்கி வணக்கமாகக் குனிந்து, ‘அம்மணி: மன்னிக்கவேண்டும். நிரம்பவும் இன்பகரமாக நீங்கள் வீணை வாசித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதற்கு இடையூறாக நான் வந்ததைப் பற்றி என் மனம் மிகவும் சங்கடப்படுகிறது. நான் வாசற்படியண்டை வந்தபோது உங்களுடைய சங்கீதம் வெகுவெகு பிரம் மாதந்தமாக இருந்தது. நான் வருவதைக் கண்டால் நல்ல சமயத்தில் நீங்கள் பாட்டை நிறுத்திவிட்டு என்னோடு பேச ஆரம்பிப்பீர்கள் என்று நினைத்து, நான் சந்தடி செய்யாமல் மெதுவாகக் கதவைத் திறந்து பார்த்தேன். நீங்கள் அப்புறம் பார்த்தபடி இருந்தீர்கள். நான் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு உட்புறத்தில் எட்டிப் பார்த்தபடி நின்றால் வெளியிலுள்ள மனிதர்கள் ஏதாவது சந்தேகம் கொள்வார்கள் என்று நினைத்து அடிமேலடி வைத்து மெதுவாக நடந்து வந்து கொஞ்சநேரமாக இப்படியே நின்று கொண்டிருக்கிறேன். நான் பிறந்தது முதல் இப்படிப்பட்ட மகா சிரேஷ்டமான வீணாகானத்தைக் கேட்டதே இல்லை. ஆகையால், நான் பரவசமடைந்து மெய் மறந்து உங்களுடைய அனுமதி பெற்று உள்ளே நுழைய வேண்டும் என்பதையும் மறந்து இங்கே வந்து