பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பூர்ணசந்திரோதயம்-4 விட்டேன். அதைப்பற்றி என் மேல் நீங்கள் கோபிக்கக்கூடாது. என்று நயமாகக் கூறினார். -

அதைக்கேட்டு நிரம்பவும் கோபம் கொண்டவள்போலக் காணப்பட்ட அந்த ஏந்தெழில் மடந்தை, “ஒகோ! நன்றாக இருக்கிறதே கதை நான் வீணை வாசிக்கும்போது இந்த ஒசை வெகுதூரம் வரையில் நன்றாகக் கேட்குமே; அப்படியிருக்க, இந்த வாசல் கதவுக்கு அப்பால் இருந்துகொண்டே ஏன் கேட்கக் கூடாது? யாரும் உத்தரவில்லாமல் இங்கே வரக்கூடாதென்ற நியமம் உனக்குத் தெரிந்திருக்கிறது. அப்படியிருந்தும் யாதொரு காரணமும் இல்லாமல் நீ கதவைத் திறந்து ஏன் பார்க்க வேண்டும்? எதற்காக உள்ளே வந்து திருட்டுத்தனமாக வெகுநேரம் வரையில் நிற்க வேண்டும் 2 வீணையின் ஒலி வெளியிலேயே சுத்தமாகக் கேட்கையில், நீ அவ்விடத்தி லிருந்தே பாட்டைக் கேளாமல் உள்ளே வந்தது, மனிதரைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு வந்ததாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி, சங்கீதத்தைக் கேட்க வந்ததாக நினைக்கவே ஏதுவில்லை. நீ சொல்லுவதை உண்மையாகவே வைத்துக் கொண்டாலும், நான் வீணை வாசிப்பது நன்றாக இருக்கிறதென்ற காரணத்தினால், நீ செய்யத்தகாத காரியத்தைச் செய்யலாமா? இப்படிப்பட்ட பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு மன்னிக்க வேண்டுமென்று சுலபமாகச் சொல்லி விட்டால், தப்பித்துக் கொள்ளலாமென்று நினைத்துக் கொண்டாயா? நீ இன்னாள் என்பதே எனக்கு இன்னமும் தெரியாமலிருக்கிறது? இது கோஷா ஸ்திரீ இருக்கும் தனிமையான இடம்; இவ்விடத்தில் நீ அங்கி போட்டு உன்னை மறைத்துக் கொண்டிருக்கவே காரணமில்லை. உன் அங்கியை முதலில் விலக்கு; நீ யார் என்பதை நான் தெரிந்து கொள்ளுகிறேன்” என்று நிரம்பவும் எடுப்பாகவும் நிமிர்வாக வும் பேசியவண்ணம் தான் இருந்த லோபாவின் மேல் வீணையை வைத்து விட்டு எழுந்து நின்றாள். அங்கிக்குள்