பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 47 மறைந்திருந்தவர், ‘அம் மணி நான் வேறே யாதொரு வேலையுமில்லாமல், இந்த வீணாகானத்தைக் கேட்பதற்கு மாத்திரம் இங்கே வந்திருந்தால், அது நீங்கள் சொல்லுகிறபடி பெருத்த குற்றந்தான். நான் உங்களிடம் ஒர் அலுவலாகவே வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இந்த எதிர்பாராத சங்கீத சுகமும் கிடைத்தது. இதைக் கேட்டு நான், என்ன கருத்தோடு வந்தேனோ அதை வெளியிடாமல் சும்மா நின்றேன். அவ்வளவுதான் நான் செய்த குற்றம். அலுவலில்லாமல் அநாவசியமாக நான் உள்ளே வரவில்லை’ என்றார்.

பூர்ணசந்திரோதயம், “சரி; நீ இங்கே ஏதோ காரியார்த்தமாக வந்ததாகவே வைத்துக்கொள்வோம். அப்படியிருந்தாலும், நீ என்னுடைய தாதிகளின் மூலமாக செய்தி சொல்லியனுப்பி, என்னுடைய விருப்பத்தையும் சந்தர்ப்பத்தையும் தெரிந்து கொண்டல்லவா உள்ளே வரவேண்டும். உனக்கு என்னிடம் வேலையிருந்தால், நேராகவே தடதடவென்று உள்ளே நுழைந்து விடுகிறதுதான் ஒழுங்கா?” என்று முறுக்காகப் பேசிய வண்ணம் அவ்விடத்தை விட்டு நாலைந்தடி தூரம் நடந்து அப்பால் போய்த் தனது சப்பிர மஞ்சனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்து கொண்டாள்.

அங்கிக்குள் மறைந்திருந்த மனிதர் சிறிதும் அஞ்சாமல் அவளிருந்த இடத்தை நோக்கி மெதுவாக நடந்தவண்ணம், “ஆம்; அம்மணி நீங்கள் சொல்லுகிறபடி செய்ய வேண்டியது தான் சாதாரணமான ஏற்பாடு. நான் வந்த காரியமோ அசாதரண மானது. என்னை இங்கே அனுப்பி வைத்த எஜமானர், நான் தாதிகளுக்குத் தெரியாமல் இங்கே வந்து உங்களிடம் சங்கதியைக் கேட்டுக்கொண்டு வரச் சொன்னார். ஆகையால், நான் அவருடைய உத்தரவின்படி நடந்துகொள்ள நேர்ந்தது. அவ்வளவுதான் வேறொன்றுமில்லை’ என்றார்.

பூர்ணசந்திரோதயம், ‘ஓகோ அப்படியா! உன்னுடைய எஜமானர் யார்? நீ யார்? நான் இருக்கும் இந்த அந்தப்புரத்தில்