பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 49 விட்டது. ஆகையால், நான் இரண்டு மாசத் தவணை ஏற்படுத்தியதையும் சுத்தமாக மறந்துபோய் விட்டேன். நான் இங்கே வந்து எத்தனை நாளாயிற்று என்ற கணக்கையும் நான் வைக்காமல் இருந்து விட்டேன். இருந்தாலும், இளவரசர் சரியாக அந்தக் குறிப்பிட்ட மணி நேரத்தில் ஆளை அனுப்பியது எனக்கு நிரம் பவும் ஆச்சரியமாக இருக்கிறது! இன்று பகலிலாவது இதற்கு இரண்டொரு தினங்கள் முந்தியாவது இந்த விஷயத்தைச் சொல்லி நினைப்பூட்டி இருக்கக் கூடாதா? நான் அதற்குத் தகுந்தபடி ஆயத்தமாக இருக்கமாட்டேனா? இப்போது இதோ பக்கத்தில் ஏராளமான தாதிமார்கள் இருக்கிறார்கள். இளவரசர் இங்கே வரும்போதும் போகும் போது ஒருவேளை யாராவது தாதி அவரைப் பார்க்க நேர்ந்தாலும் நேரலாம். அப்படிப் பார்ப்பவள், அதை மற்றவர் களிடம் வெளியிடுவது நிச்சயம். பிறகு இங்குள்ளவர்கள் என்னைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயம் கொள்ள மாட்டார்கள்? இந்த விஷயமெல்லாம் மகாராஜாவுக்குத் தெரியாததல்ல. அவருக்கு நாம் இதையெல்லாம் எடுத்துச் சொல்வது மரியாதையாகாது’ என்றாள்.

அங்கிக்குள் மறைந்திருந்தவர், ‘ஓகோ இளவரசர் இங்கே வந்தால், ஒருவேளை தாதிகள் பார்த்துவிடப் போகிறார்கள் என்ற ஒரு விஷயத்தைப் பற்றித்தானே நீங்கள் கவலைப் படுகிறீர்கள்? அதைப் பற்றி நீங்கள் இனி கொஞ்சமும் கவலைப்படத் தேவையில்லை. இரவு பகல் உங்கள் நினைவே நினைவாக இருந்து உங்கள் விஷயத்தில் இத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கும் இளவரசர் உங்களுடைய கண்ணியத்துக்குக் குறைவு ஏற்படக் கூடிய காரியத்தைச் செய்வாரா? நீங்கள் இம்மாதிரியாகக் கவலைப்படுவீர்கள் என்று நினைத்தே இளவரசர் இப்படித் தந்திரமாக நடந்து கொண்டார்’ என்று கூறியவண்ணம், தமது உடம்பை மூடிக்கொண்டிருந்த பனாரீஸ் பட்டங்கியை அடியிலிருந்து