பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பூர்ணசந்திரோதயம்-4 தூக்கி குபிரென்று விலக்கி அப்பால் எறிந்தார். எறியவே, அந்த அங்கிக்குள்ளிருந்து இளவரசரது வடிவம் வெளிப்பட்டது. இளவரசர் ஏராளமான வைர ஆபரணங்களையும் ஜரிகைப் பட்டாடைகளையும் அணிந்து வந்திருந்தார். ஆகையால், அவ்விடத்தில் கோடிசூரியப் பிரகாசமாக ஜ்வலித்த ஸ்ர விளக்குகளின் பிரகாசத்தில் இளவரசர் ஜெகஜ்ஜோதியாகப் பிரகாசித்தார். அவரது முகம் கரைகடந்த மகிழ்ச்சியினாலும் குதுகலத்தினாலும் மலர்ந்து புன்னகை செய்தது. அங்கிக்குள் மறைந்து வந்து அவ்வளவு நேரம்தன்னோடு பேசியது இளவரசர் தான் என்பதைப் பூர்ணசந்திரோதயம் ஆரம்பத்திலேயே எளிதில் யூகித்தறிந்து கொண்டாள். அதுவுமன்றி, அன்றையதினம் தனது கடித நிபந்தனைபடி அவர் தன்னை நாடி வருவார் என்று நிச்சயமாக எதிர்பார்த்தே அவள் தன்னை அப்போது அபாரமாக அலங்கரித்துக் கொண்டு, வீணாகானத்தின் உதவி யாலும் தனது மனமோகன அலங்காரத்தினாலும், அவள் தனது வசீகரத்தன்மையை முன்னிலும் பதினாயிரமடங்கு அதிகரித்துக் கொண்டவளாய் அவரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்து ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தாள். அவள் வீணாகானத்தில் லயித்து மெய்மறந்து போனவள் போலக் காணப்பட்டாள். ஆனாலும், இளவரசர் சிறிதும் ஒசை செய்யாது கதவைத் திறந்ததையும், உள்ளே வந்து நின்றதையும் உணர்ந்தவளாய், எதையும் கவனியாதவள்போல இருந்து, கடைசி வரையில் கபடமற்ற மனிஷிபோலக் கோபமாக நடந்தாள்.

அங்கி விலக்கப்பட்டபின், இளவரசர் பிரத்தியrமாக நேரில் வந்ததைக் காணவே அந்த அஞ்சுகவஞ்சி திடுக்கிட்டு நடுங்கிக் கட்டிலை விட்டுக் கீழே இறங்கி நிற்கிறாள்; தனது கைகளைப் பிசைந்து கொள்கிறாள்; அபாரமான நாணத்தினால் மேற்கொள்ளப்பட்டவள் போலத் தலைகுனிந்து தனது காலின் கட்டை விரலைப் பார்த்தபடி நின்று தத்தளிக்கிறாள். வாயைத் திறந்து பேசுவதற்கே வெட்கினவள் போல நடிக்கிறாள்.