பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 151 கடைசியில் அந்த மின்னற் கொடி கோவைக் கனி போலக் கனிந்து தேன் ததும்பி இருந்த தனது அதரங்களை நிரம்பவும் வசீகரமாக மலர்த்தி அஞ்சுகம் கொஞ்சவதுபோலப் பேசத் தொடங்கி, “மகாப் பிரபுவே! நான் எத்தனை பாவங்கள் செய்தோ, மானிட ஜென்மத்தில் இரண்டாம் பட்சமாகிய ஸ்திரீ ஜாதியாக வந்து பிறந்திருக்கிறேன். இந்த ஜென்மத்திலாவது நான் பாவம் என்பதையே மனசாலும் நினையாமல், ஸ்திரீ

தர்மப்படி நடந்து புண்ணியம் சம்பாதித்து நற்கதி அடைய வேண்டாமா? மகாராஜாவின் விஷயத்தில் நான் நிரம்பவும் அவமரியாதையாக நடந்து இப்படிப்பட்ட பெருத்த அபராதி ஆகும்படி தாங்கள் செய்தது தர்மமாகுமா? கோடானுகோடி பிரஜைகளுடைய முடிகள் படியும் பெருமை வாய்ந்த தங்களுடைய பாதகமலம் நோகும் படி தாங்கள் நிற்கவும், ஏழையிலும் பரம ஏழையான நான் இறுமாப்பாக உட்கார்ந்தி - ருக்கவும், தங்களை நான் ஒருமைப் பதங்களால் அழைக்கவும் நேர்ந்தது மன்னிக்கத் தக்க குற்றங்களா? ஆகா! நான் என்ன செய்வேன்? என் மனம் படும் பாட்டை என்னவென்று வெளியிடுவேன்! இந்தப் பரமபாதகத்தை நான் எவ்விடத்தில் போய்த் தொலைப்பேன்! இனியும் மகாராஜா நிற்காமல் தயைசெய்து அமர்ந்து கொள்ள வேண்டும்” என்று நிரம்பவும் கனிவாகக் கூறினாள்.

அதைக்கேட்டு ஆனந்த பரசவமடைந்து பூரித்துப் போன இளவரசர் பக்கத்திலிருந்த அவளது சப்பிர மஞ்சத்தின் மீது அமர்ந்து, ‘'கண்ணே பூர்ணசந்திரா ஏன் இப்படி நீ அநாவசியமாகக் கலங்கி உன் மனசை வதைத்துக் கொள்ளுகிறாய்? நம்மிருவருடைய மனசும் ஒன்றுபட்டு ஒத்துப் போய் விட்ட பிறகு நீ எனக்கு மரியாதை செய்து உபசார வார்த்தைகள் சொல்லவும் வேண்டுமா? நான்தான் அங்கிக்குள் மறைந்து வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரிந்திருந்தால் நீ இப்படி ஒருநாளும் நடந்து கொண்டிருக்க மாட்டாய் என்பது