பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 155 நடந்து இளவரசரண்டையில் நெருங்கி வந்து அவருக்கு இரண்டு முழதுரத்தில் நின்றபடி நிரம்பவும் பணிவாகவும் கனிவாகவும் பேசத் தொடங்கி, “மகாப்பிரபுவே! இந்த ராஜ்யத்தில் தங்களுடைய திருவாக்குக்கு எதிர்வாக்கு சொல்லக் கூடிய துணிவுள்ளவரும் இருக்கிறார்களா ஒருவருமில்லை. அப்படியிருக்க, கேவலம் அபலையும் அநாதையுமான நான் தங்களுடைய சித்தத்துக்கு மாறாக நடப்பது சொப்பனத்திலும் கூடுமா? ஒருநாளும் கூடவே கூடாது. அதுவுமன்றி, நிரம்பவும் ஏழையாக இருந்த என்மேல் மகாராஜா கிருபை பாலித்து என்னைக் கொணர்ந்து மகா மண்டலேசுவர்களான மன்னர் களுடைய பத்தினிமார்களுக்கும் கிடைக்காத மகோன்னத பதவியில் வைத்து அளவற்ற ஐசுவரியத்தில் என்னைப் புதைத்து எவருக்கும் கிடைக்காத சகல சுகபோகங்களையும் கணக்கின்றிச் சொரிந்து, பரமபதமென்று சொல் லத்தக்க ஒப்புயர்வற்ற பேரின்ப நிலையில் என்னை வைத்து, என்மேல் கரைகடந்த காதலும் பிரேமையும் கொண்டுள்ள பெரும் வள்ளலானதங்கள் விஷயத்தில் நான் என்னுடைய உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் அர்ப்பணம் செய்யக் கடமைப்பட்டவளாக இருக்கிறேன். ஆனால், நான் முதலில் தங்களிடம் ஒரு சிறிய மனுச் செய்து கொள்ளப் பிரியப்படுகிறேன். மகாராஜா அவர்கள் இந்த ஏழையின் விண்ணப்பத்துக்குச் செவி சாய்த்து என்னைக் காத்தருள வேண்டுமாய்ப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். நான் ஜெகன்மோகன விலாசத்தில் இருந்த காலத்திலேயே, நான் எந்தப் புருஷருடைய முகத்திலும் விழிக்காமலும், எவருடனும் பேசாமலும், நிரம்பவும் எச்சரிப்பாகவே இருந்து வந்தேன். தாங்களும் மற்றவர்களும் என் விஷயத்தில் ஏற்படுத்திய பந்தய சம்பந்தமாக தங்களுக்கு முன் சில மனிதர்கள் என்னிடம் வந்து பலவகையில் தந்திரம் செய்து என்னை அடைய முயற்சித்த காலத்திலும், நான் ஒரே உறுதியாக இருந்து அவர்களை வெறுத்து அவமானப்படுத்தி அனுப்பிவிட்டது எல்லாம் எஜமானருக்குத் தெரிந்த விஷயமே.