பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157 உண்மையே. இன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு இங்கே வந்தால், நான்தங்களுடைய பிரியப்படிநடந்துகொள்ளுகிறேன் என்று எழுதியதும் உண்மையே. என் விஷயத்தில் தாங்கள் அபாரமான எத்தனையோ நன்மைகளைச் சொரிந்து, என் கோரிக்கைகளையேல்லர்ந்தின்றவேற்றி இருக்கையில், நான் சொன்னவாக்குறுதியை மீறி நடப்பது ஒழுங்கல்ல. அப்படி நான் தவறி நடந்தால் என்னை எப்படிப்பட்ட கொடிய தண்டனைக்கு ஆளாக்கவும் மகாராஜாவுக்கு உரிமையுண்டு. அப்படி என்னைத் தண்டிப்பது பாவமான செய்கை ஆகாது. ஆனால், நான் தங்களிடம் கெஞ்சி மன்றாடி இன்னொரு வேண்டுகோள்செய்து கொள்ளப் பிரியப்படுகிறேன். அதற்கும் செவிசாய்த்தருளி என்னைக் காப்பாற்ற வேண்டும் ‘ என்று பெரிய பீடிகை போட்டுப் பேசத் தொடங்கினாள்.

இளவரசர் தனக்கருகில் வந்து நின்ற அந்த அற்புத தேஜோ மயமான மோகன ஸ்வரூபிணியின் ஒவ்வோர் அங்கத்தின் கட்டழகையும் கண்டு சகிக்க வொண்ணாத பிரமிப்பும், கலக்கமும் அடைந்து மதிமயங்கி மன நெகிழ்வு அடைந்த வராய் அவளை நோக்கிப் புன்முறுவல் செய்து, ‘கண்ணே! பூர்ணசந்திரா! உனக்கு என்னால் என்ன காரியம் ஆக வேண்டுமானாலும், என்ன பொருள் தேவையானாலும், நீ வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல் வாயானால், அதே rணத்தில் நான் அதை நிறைவேற்றி வைப்பேன் என்பதை நீ நிச்சயமாக நம் பலாம். என்றைக்கு உன்னை நான் கண்டு அபாரமான உன் அழகில் ஈடுபட்டு உன்னுடைய புத்தி தீrண்யத்தையும், பரிசுத்தமான நடத்தையையும் உணர்ந்து உன்னை நான் அடையவேண்டும் என்று உறுதி செய்து கொண்டேனோ, அன்றைக்கே நான் என் உடல் பொருள் ஆவி ஆகிய சகலத்தையும் உன் வசம் ஒப்புவித்து விட்டேன். ஆகையால், நீ கேட்டு நான் கொடுக்காத பொருளும் உண்டா? உனக்கு என்ன வேண்டுமோ அதைக் கூசாமல் கேட்டுப் பெற்றுக்