பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 161 கூட இடர் செய்ய மனசாலும் எண்ணாத மகா பரமார்த்தியாக இருக்கிறாயே! நீ எமனைக் கண்டு ஏன் பயப்படவேண்டும்? நீ இதுவரையில் அவஸ்தைப்பட்டது போதும். இனியாவது அநாவசியமான அந்தப் பயத்தை விட்டுவிடு. அந்தப் புஸ்தகத்தில் படித்த விஷயங்களை அடியோடு மறந்துவிடு. நானும் நீயும் கொஞ்சமும் துன்பமென்பதே கலவாத நிச்சலனமான ஆனந்தசாகரத்தில் மூழ்கி இருந்து பரமாநந்தககம் அனுபவிக்க வேண்டிய இந்தக் காலத்தில் நீ இப்படிப்பட்ட கற்பனையான விஷயங்களை உண்மையென்று நம்பி பயந்து நடுங்கி மனசைக் குன்றவைத்து நம்முடைய சந்தோஷத்தை ஏன் போக்கடித்துக் கொள்ள வேண்டும். போதும் வா இப்படி தூர நிற்க வேண்டாம்’ என்று கூறி அவளைப் பிடித்துத் தமக்கு அருகில் இழுக்க முயன்றார்.

அவரது கை பட்டவுடனே பூர்ணசந்திரோதயத்தின் உடம்பு கிடுகிடென்று ஆடியது. அவளது சிரம், கைகள், கால்கள் முதலிய அங்கங்கள் நாணத்தினால் நெளிந்து கோணுவது முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தது. அந்த மனமோகன வடிவழகி அவரது இழுப்பிற்கு வராமல் உறுதியாக தூர நின்றபடிதனது பற்களை அழகாகத் திறந்து கெஞ்சத் தொடங்கி, ‘மகாராஜர் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் கேட்ட வரத்தைத் தாங்கள் கொடுத்திருந்தும் அதை மீறி இப்படி அவசரப்படுவது நியாயமாகுமா? நான் இப்போது தங்களிடம் ஒரு விஷயம் கேட்டுக்கொண்டேன். அப்படியே செய்வதாக தாங்கள் சொல்லி வாக்களித்ததன்றி விஷயம் என்னவென்று கேட்டீர்கள். அதை நான் விவரமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். இதற்குள் தாங்கள் என் புத்தி கலங்கிப் போகும் படியான காரியத்தில் இறங்கினால் நான் மிகுதி விஷயத்தை எப்படிச் சொல்லப் போகிறேன்? தயை செய்து கொஞ்சம் பொறுங்கள்’ என்று நிரம்பவும் நயமாக வணங்கி மன்றாடிக்

கேட்டுக் கொண்டாள்.