பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பூர்ணசந்திரோதயம்-4

இளவரசர், ‘நீதான் எல்லா விஷயங்களையும் சொல்லி விட்டாயே; இன்னமும் என்ன பாக்கியிருக்கிறது? ஏதோ கருட புராணத்தைப் படித்தபிறகு உன் மனசில் ஒருவிதமான பயம் உண்டாகி உன்னை நிரம் பவும் கஷ்டப்படுத்தியதாகச் சொன்னாய். அவ்வளவுதானே? இன்னம்வேறே என்ன சங்கதி இருக்கிறது? அந்தப் பயம் இன்னமுமா தீராமல் இருக்கிறது? அதற்காக ஒருவேளை இந்தத் தவணையை இன்னும் கொஞ்சம் தள்ளி வைத்துக்கொள்ள எண்ணுகிறாயா? அப்படி நீ சொல்வா யானால் அது உன்னுடைய அபாரமான புத்திக்கும் விவேகத் துக்கும் ஒர் இழுக்காகுமேயன்றி வேறல்ல. ஏதோ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு பொய் விஷயத்தை நினைத்து இப்படி யாராவது பயப்படுவார்களா? நீ சொல்லுவது எனக்கு நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறதே! இப்போது நீயும் நானும் ஒன்றுகூடி உலகத்தைப்பற்றிய வேறு சகல விதமான கவலைகளையும் நினைவுகளையும் அடியோடு ஒதுக்கி வைத்துவிட்டு ரதியும் மன்மதனும் போல எப்போதும் குதூகலமாக இருந்து ஆனந்த வாரிதியில் ஆழ்ந்து கிடப்பதே முதன்மையான விஷயம். அதை நாம் உடனேகவனித்தால், உன் மனதில் ஏற்பட்ட பயமெல்லாம் கொஞ்ச நேரத்தில் போன இடம் தெரியாமல் மறைந்து போய்விடும்’ என்று ஆத்திரத்தையும் அவசரத்தையும் குறித்த மொழிகளைக் கூறினார்.

அதைக்கேட்டபூர்ணசந்திரோதயம் முன்னிலும் நூறு மடங்கு அதிக வசீகரமாகவும் நயமாகவும் உருக்கமாகவும் பேசத் தொடங்கி, “மகாராஜாவே! நான் அந்தக் கருடபுராணத்தில் படித்த சங்கதிகளும், என் மனசில் தைத்த முக்கியமான விஷயத்தை நான் இன்னும் சொல்லவில்லை. அதைச் சொல்லவே பயமாக இருக்கிறது. அதாவது, ஒரு ஸ்திரீ தான் தாலி கட்டினவனைத் தவிர வேறு புருஷனை அணைந்தால், அவளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் தண்டனை என்ன தெரியுமா? ஆகாயத்தை அளாவிய அக்கினியின்மத்தியில் அந்தச் சோர நாயகனைப் போலுள்ள ஒரு வெண்கலச் சிலை பழுக்கக்