பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 163 காய்ந்திருக்குமாம். அந்த ஸ்திரீயின் ஜீவன்போய் அதைக் கட்டிக் கொண்டபடி நெடுங்காலம் இருக்க வேண்டுமாம். நெருப்புதகிக்கும் பரமவேதனையை மாத்திரம் அந்த ஸ்திரீயின் ஜீவன் உணர்ந்துகொண்டே இருக்குமாம். ஆனால், அந்த ஜீவன் தணலினால் அழிந்து போகாமல் எப்போதும் அந்தக் கொடுந் துன்பத்தை அனுபவித்துக்கொண்டே இருக்குமாம். அந்தத் தண்டனையை நினைக்கும்போதே என் உடம்பு முழுதும் கிடுகிடென்று ஆடுகிறது. மகாகோரமான ரூபத்தோடு கூடிய எம தூதர்கள் இப்போதே வந்து என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்ப் பழுக்கக்காய்ந்துள்ள அந்தச் சிலையில் தள்ளி விடுவதுபோல ஒரு தோற்றம் என் மனசில் உண்டாயிற்று. ஆகையால், அப்படிப்பட்ட மகாகொடிய தண்டனைக்கு ஆளாகாமல் தப்பவேண்டும் என்றும், தாலி கட்டாத அன்னிய புருஷரை நான் மனசாலும் நினைக்கக் கூடாதென்று என்மனசில் ஒருவித உறுதி செய்து கொள்ளும்படி நேர்ந்துவிட்டது. அதை உத்தேசித்தே நான் நிரம் பவும் பயந்து நடுங்குகிறேன். ஆகையால், மகாராஜா இந்த ஏழையின் மேல் தயை கூர்ந்து, என்னை அப்படிப்பட்ட கொடுர தண்டனைக்கு ஆளாக்காமல் காப்பாற்ற வேண்டும்; இதுதான் கொஞ்ச நேரத்துக்கு முன் நான் கேட்டுக்கொண்ட வேண்டுகோள்’ என்று நிரம்பவும் பயந்தவள்போலக் கூறினாள். அவளது உடம்பு தீத்தணலில் கருகும் வாழைக் குருத்துபோல வாடித் துவண்டு தள்ளாடியது. கண்களிலிருந்து கண்ணிர் பொங்கி எழுந்து தாரைதாரையாக இரண்டு கன்னங்களின் வழியாகக் கீழே இறங்கியது. அவள் தரையில் உட்கார்ந்து மண்டியிட்டு இளவரசரது கால்களைப் பிடித்துக்கொண்டு பாகாய் உருகி அழத் தொடங்கினாள்.

அந்த வடிவழகி திடீரென்று குழந்தைபோல மாறிப்போய் கண்ணிர் விடுத்துக் கலங்கி அழுததைக் கண்டு கரைகடந்த கலக்கமும் சஞ்சலமும் அடைந்த இளவரசர் தமது கரங்களைக் கொடுத்து, அளவற்ற அன்போடு அவளைத் தூக்கி எடுத்தவராய், ‘பூர்ணசந்திரா என்ன இது? படத்திலுள்ள