பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பூர்ணசந்திரோதயம்-4 ராrசனைப் பார்த்துக் குழந்தைகள் அலறி அழுவதைப் போலல்லவா இருக்கிறது நீ செய்வது? ஜெகன் மோகன விலாசத்திலிருந்த காலத்தில் நீ தோற்றுவித்த உலக ஞானமும் பகுத்தறிவும் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டன என்பது தெரியவில்லையே! புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் கற்பனையான ஒரு விஷயத்தைப் படித்துவிட்டு யாராவது இப்படி அல்லல் படுவதுண்டா? எமனுலகத்தில் இன்னதுதான் நடக்கிறது என்பதை யார் பார்த்துவிட்டு வந்தார்கள்? மனிதன் இறந்து போனால், அதன்பிறகு, அவனுடைய ஜீவன் எங்கே போகிறது என்பதும், எவ்விதமான சுக துக்கங்களை அனுபவிக்கிறதென்பதும் அந்த மனிதனுக்குத் தெரியாமல் போய்விடுகிறது. அப்படிப்போன ஜீவன் மறுபடி வந்து குழந்தையாகப் பிறக்கும்போது அதற்கு முந்திய விஷயங்களெல்லாம் அந்தக் குழந்தைக்குத் தெரிகிறதில்லை. இந்த உடம்பை விட்டுப் பிரிந்த பிறகு மனிதருடைய ஜீவன் எங்கே போகிறது என்பதையும், அதற்கு ஏற்படும் கதி இன்னது என்பதையும் அறிந்து பூலோகத்தில் வந்து நமக்கு ஒருவரும் சொன்னதில்லை. அப்படிச் சொல்வதும் முடியாத காரியமாக இருக்கிறது. அந்தப் புராணத்தில் சொல்லப்பட்டிருப்பது எல்லாம் வெறும் யூகமேயன்றி நிச்சயமான உண்மையல்ல. மனிதர் அப்படியாவது பயந்து நல்லவழியில் நடக்கட்டும் என்ற முக்கியமான கருத்தோடு அந்தப் புராணம் எழுதப் பட்டிருக்கிறதே ஒழிய வேறல்ல. ஆகையால், அதை நீ உண்மையென்று நினைத்துப் பயப்படுவதே அநாவசியம்; எழுந்திரு; அழாதே’ என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறி அவளது கண்களைத் துடைத்துவிட்டு மிகவும் அருமையாக அவளைத் தூக்கி எடுத்தார்.

அப்போதும் தணிவடையாமல் முன்னிலும் பன்மடங்கு அதிக விசனமும் கலக்கமும் அடைந்தவளாய்க் காணப்பட்ட பூர்ணசந்திரோதயம் அவரது பிடியைவிட்டு நழுவிச்சிறிதுதுரம் அப்பால் நகர்ந்து கொண்டு, ‘மகாராஜா எவ்வளவுதான்