பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 165 சொன்னாலும், என் மனம் துணிவுகொள்ள மாட்டேன் என்கிறது. என் பயமும் நீங்காது என்றே நினைக்கிறேன். நம்முடைய முன்னோர்கள் எழுதி வைத்துள்ள தெய்வீகமான புஸ்தகங்களை எல்லாம் பொய் யென்று எளிதில் விலக்கித் தள்ளுவது சரியாகுமா? நமக்காக எத்தனையோபாடுகள் பட்டுத் தமது வாழ்நாட்கள் முழுதையும் ஒரே துறையில் செலுத்தி அரும் பெரும் விஷயங்களையும் ரகசியங்களையும் நம் முன்னோர் கண்டுபிடித்து எழுதியிருக்கிறார்கள். அவைகளை அபிவிருத்திச் செய்து மேன்மேலும் ரகசியங்களைக் கண்டுபிடித்துப் புதுமையான விஷயங்களை எழுதிவைக்க இக்காலத்து மனிதருக்குத் திறமையில்லா விட்டாலும், முன்னோர்கள் தேடிவைத்த அரிய பொருட்களின் உண்மைகளை யாவது அறிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா. அதைவிட்டு நம்முடைய புராணங்களை எல்லாம் நாம் பொய்யென்று சொல்வது சரியல்ல. இப்போதும் பூர்வஜென்ம ஞானத் தோடு ஆங்காங்கு சிற் சிலர் பிறப்பதாக நாம் கேள்வியுறுகிறோம். அதுவுமன்றி, முற்காலத்தில் அபாரமான ஞானமும் அதிதீrண்யமான புத்தியும் உள்ள மகான்கள் எத்தனையோபேர் இருந்து இறந்திருக்கிறார்கள். அவர்கள்.தமது அறிவையும் ஐம்புலன்களையும் அடக்கி, உள்புறம் திருப்பி யோகாப்பியாசம் செய்து தமது ஞானதிருஷ்டியை வலுப்படுத்தி அதன் உதவியால் ஈசுவர சிருஷ்டியின் ரகசியங்களை எல்லாம் அறிந்திருப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக நாம் இப்போது நமது பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். அடுத்த வருஷத்தில் இன்னதினம் இன்னநாழிகை இன்னவிநாடியில் கிரகணம் பிடிக்கப் போகிறது என்றும், அதன் பரிமாணம் இவ்வளவு என்றும், அது இன்னகாலத்தில் விலகும் என்றும் இப்போதே கண்டு எழுதிவிடுகிறார்கள். அதுபோலவே காரியம் நடைபெறவில்லையா? இதுபோல இன்னமும் மிகமிக சூட்சுமமான கோடானுகோடி ரகசியங்களையும், நுட்பத்திலும் நுட்பமான விஷயங்களையும் நம்மவர்கள் கண்டு பிடித்திருக்க