பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பூர்ணசந்திரோதயம்-4 என் விஷயத்தில் இப்படிப்பட்ட கரைகடந்த வாத்சல்யமும் பாசமும் கொண்டு பரம ஏழையான என்னை எவருக்கும் கிட்டாத ராஜஸ்திரீயின் பதவியில் வைக்க இஷ்டப்படுவதைக் காண என்மனம் நிரம்பவும் உருகுகிறது. இந்த நிமிஷத்தில் நான் அடையும் பெருமைக்கும் பேரானந்தத்துக்கும் அளவு சொல்ல யாராலும் முடியவே முடியாது. ஆனாலும், என் மனசில் இன்னொரு புதிய கவலை உண்டாகி என்மனசை வதைக்கிறது. ஒரு ஸ்திரீக்குத் தாலி கட்டுவதைத் தங்கள் குழந்தைகள் பொம்மைக் கலியாணம் செய்து விளையாடுவதைப் போல நிரம்பவும் எளிதாக நினைத்துப் பேசுகிறீர்கள் போலிருக்கிறதே. அக்கினி சாட்சியாகவும் ஆகாயவாணி பூமாதேவி சாட்சி யாகவும், இன்னும் விஜயம் செய்துள்ள ஜனங்கள் சாட்சி யாகவும்தாலிகட்டும்போது ஸ்திரீ.பதிவிரதாதருமப்படி நடந்து கொள்வதாகவும், புருஷர் ஏகபத்தினி விரதர்களாய் இருப்ப தாகவும் பிரமாணம் செய்து ஒருவரை யொருவர் உயிர்த் துணையாகவும் ஜீவாதாரமாகவும் ஏற்றுக்கொள்ளுகிறார்களே. அப்படிப்பட்ட மகா முக்கியமான சடங்கு நிறைவேறிய பின் நான் தான் பிற புருஷரை மனசாலும் நினைக்கலாமா, அல்லது, தாங்கள் தான்வேறு ஸ்திரீயை நாடலாமா? அப்படி நடந்து கொள்ளாமல் துரோகம் செய்பவர்களுக்கு அந்தக் கருட புராணத்தில் சொல்லியிருக்கும் தண்டனையும் மகா பயங்கர மானதாக இருக்கிறது. நான் ஆரம்பத்தில் இங்கே வந்த காலத்தில் தங்களுக்கு வேறே மனைவியாரும் இல்லையென்றே எண்ணிக் கொண்டிருந்தேன். இங்கே வந்து விசாரித்தபிறகு உண்மை யெல்லாம் தெரியவந்தது. பூனாதேசத்து ராஜகுமாரியும், சகல அம்சங்களிலும் குன ஒழுக்கங்களிலும், தங்களுடைய பட்டமகிஷியாக இருக்கத் தகுந்தவர்களுமான பெண்ணரசி யைத் தாங்கள் சாஸ்திரப்படி கலியாணம் செய்து கொண்டி ருப்பதாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட சர்வ சிலாக்கியமான மாதரசி தங்களுக்குப் பட்டமகிஷியாக இருக்கையில், சகல விதத்திலும் கேவலம் தாழ்ந்தவளான என்னைத் தாங்கள்