பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் i 69 கலியாணம் செய்துகொள்ள நினைப்பது மகா உத்தமியான அந்தப் புண்ணியவதியின் விஷயத்தில் பெருத்த துரோகம் செய்ததாகுமே அன்றி வேறல்ல. நியாயப்படி பார்த்தால் தங்களோடு இருந்து சந்தோஷம் அனுபவிக்க உரிமை உடையவர்களான அந்த மகாராணியாரைப் புறக்கணித்து அவர்கள் வயிறெரிய நாம் சந்தோஷமாக இருந்தால் அதைவிடக் கொடிய பாவம் வேறே இருக்குமா? உடனே என்னுடைய தலையில் பெருத்த இடிய்ல்லவா விழுந்துவிடும். பதிவிரதா ஸ்திரீகளின் வயிறெரிய அக்கிரமமாக நடத்துகிறவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு நாளும் விடிய மாட்டார்கள்; வெகு சீக்கிரத்தில் நாசமடைந்து விடுவார்கள். ஆகையால், தாங்கள் பிரஸ்தாபிக்கும் விஷயம் கொஞ்சமும் நியாய சம்மதமானதல்ல. சகலமான தர்மங்களையும் சிதைந்து போக விடாமல் காப்பாற்றி நிலைநிற்கச் செய்வது தங்களைப்போன்ற செங்கோல் வேந்தர் களுடைய கடமையாயிருக்க, வேலியே பயிரை அழிப்பதைப் போலத் தாங்களே அவைகளை உல்லங்கனம் செய்தால், மற்ற ஜனங்கள் நிரையில் நிற் பார்களா? ஜனங்கள் முறை தவறி நடந்தால், அந்தத் தேசம் rேமம் அடையாமல் பாழடைந்து போய் விடாதா? அவ்வாறு தேசமும் குடிகளும் சீர்குலைந்து போகுமானால் மகாராஜாவுக்கு அதைக் காட்டிலும் வேறு பெரிய நஷ்டமாவது துக்கரமான சம்பவமாவது நடக்கக் கூடுமா? மகாராஜாவுக்கு அப்படிப்பட்ட பெருத்த துன்பம் நேருமானால், அது என்னால் ஏற்பட்டதென்ற பழிப்புக்கும் பாவத்துக்கும் நான் ஆளாக வேண்டியதோடு மகா உத்தமியான் தங்கள் பட்டமகிஷியின் வயிறெரியச் செய்த பெருந் தோஷத்துக்குரிய எமதண்டனையையும் நான் பெற நேரும்.’ தங்களுக்கும் தங்கள் பத்தினியாருக்கும் எனக்கும் நேரக்கூடிய இத்தனை துன்பங்களுக்கும் காரணபூதமாயிருக்கும் என் உறவையும் என்நினைவும் தாங்கள் விட்டுவிடுவதே சர்வதோஷ நிவாரண மருந்தென்று நான் எண்ணுகிறேன். நான் எப்போதும்