பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பூர்ணசந்திரோதயம் - 4 அவ்வளவோடு இளவரசர் தன்னை மறந்து விலக்க வேண்டுமென்று அவள்கேட்டுக்கொண்டதும், அதற்காக அவள் செய்த சாகலங்களும் வெகுவெகு நேர்த்தியாகவும், மனதை உருக்கி வாட்டக் கூடியவையாகவும் இருந்தமையால், அவைகளால், இளவரசர் அவள்மீது கொண்ட மோகமும் பாசமும் அவளை எப்படியாவது அடைய வேண்டுமென்ற மன உறுதியும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தனவே அன்றி, அவளை மறக்கவோவிலக்கவோவேண்டுமென்ற விருப்பம் ஓர் எள்ளளவும் உண்டாகவில்லை. அவள் சொன்னவார்த்தைகளும் நீதிகளும் அவர் சிறிதும் எதிர்பார்க்காதன. ஆகையால், அவர் அபாரமான ஆச்சரியமும் கவலையும் ஏக்கமும் கொண்டவராய் அவளை நோக்கி, ‘பெண்ணே. இப்போது நீ பேசுவதும், நான் கேட்பதும் சொப்பனத்தில் நடப்பதா, அல்லது உண்மையில் நடப்பதாஎன்ற சந்தேகம் என்மனசில் உண்டாகிறது. நீ பேசுவது பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, உலகநீதி முதலிய நல்லொழுக்க நூல்களைப் படித்து அர்த்தம் சொல்வதுபோல இருக்கிறதேயன்றி, உலகத்தில் பழகி அதன் அனுபவங்களைத் தெரிந்து கொண்ட வயதான மனிதர் பேசும் பேச்சாகவே காணப்படவில்லையே. நீ இந்த வார்த்தைகளை மனசார உண்மையில் பேசுகிறாயா, அல்லது, என் மனசைச் சோதிப்பதற்காக இப்படி நடக்கிறாயா என்பதே எனக்கு முதலில் சந்தேகமாக இருக்கிறது. நீ உண்மையாகவே இந்தக் கொள்கையின்படி நெறிமுறை தவறாமல் நடக்கிறவளோ அல்லவோ என்பதை நிச்சயிக்க நான் எத்தனிப்பது அநாவசியமான காரியமென நினைக்கிறேன். நீ சொல்வதெல்லாம் உண்மையென்றும், அதன்படி நீ நடக்க மனப்பூர்வமாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறாய் என்றும், நான் ஒப்புக் கொள்ளுகிறேன். நான் எப்போதும் உன்னைக் கண்டு உன்னுடைய அருமை பெருமைகளை உணர்ந்து உன்மேல் பிரியப்பட்டு உன்னை எப்போதும் சாசுவதமாக அடைய வேண்டுமென்று நான் தீர்மானித்துக் கொண்டு,