பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 75 மாட்டீர்களென்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறினாள்.

அதைக்கேட்ட இளவரசர்ஆச்சரியத்தோடு புன்னகை செய்து, “ஏதேது: நீ பேசுவதைப் பார்த்தால் மகா விவேகி போலக் காணப்படுகிறாய். அப்படி இருந்தும், கட்டுக்கதைகளான புராணங்களில் மூடநம்பிக்கை வைத்திருப்பதும், அவைகளில் சொல்லப்பட்டிருக்கிறபடி தான் நாம் நடந்து கொள்ள வேண்டுமென்று நீ ஒரே பிடிவாதமாகச் சொல்வதும் நிரம்பவும் விநோதமாக இருக்கின்றன. ஆனாலும், இப்போது நான் கடைசியாகக் கேட்ட கேள்வியின் உள்கருத்தை நீ நிரம்பவும் கூர்மையாகக் கிரகித்துக்கொண்டு, அதற்குத்தகுந்தபடியுக்தியாக பதில் சொன்னது நிரம்பவும் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. நீ அபாரமான சாமர்த்தியமும் புத்திக் கூர்மையும் உடையவளாக இருக்கிறாய் என்பதை உன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் தெளிவாக விளக்கிக் காட்டுகிறதன்றி,நான் உன்னை எப்படியும் அடையவேண்டுமென்ற என்னுடைய மன உறுதியை அதிகமாகப் பலப்படுத்துகிறது. நீ இதுவரையில் சொன்ன சொற்களின் பெரும்பாகமும் ஒப்புக்கொள்ளக் கூடியவையாக இருந்தன. ஆனாலும், நீ என்னுடைய பட்டமகிஷியைப் பற்றிப் புகழ்ச்சியாகப் பேசிய வார்த்தைக ளெல்லாம் முற்றிலும் தப்பானவை. நீ இந்த அரண்மனைக்கு வந்து சரியாக இரண்டு மாச காலம்தான் ஆகிறது. அவள் இந்த ஊரை விட்டுப் பூனாதேசத்திற்குப் போய் பல மாதங்கள் ஆகின்றன. அவள் இந்த ஊரைவிட்டுப் போன காலத்தில் நீ இந்த ஊரிலேயே இருந்திருக்கமாட்டாயென்று நினைக்கிறேன். ஒருவேளை நீ இந்த ஊரில் இருந்திருந்தாலும், அவளை நேரில் பார்த்தும் இருக்க மாட்டாய்; நீ அவளுடைய உண்மையான குணத்தையும் நடத்தையையும் அனுபவ பூர்வமாகக் கண்டிருக்கவும் மாட்டாய். ஆகையால், அவளைப் பற்றி நீ தெரிந்து கொண்டிருப்பதெல்லாம் பிறர் சொல்லக் கேட்டுத்

k,5.IV–12