பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 பூர்ணசந்திரோதயம்-4 அவரிடம் அகப்பட்டனவாம். அவைகளெல்லாம் ஒரு பெண் பிள்ளையின் கையால் எழுதப்பட்டவைபோல அழகாயும் குண்டுகுண்டான எழுத்துக்களுடையனவாயும் இருக்கின்றன வாம். ஆனால், அந்தக் கடிதங்களில், எழுதியவருடைய பெயராவது, இருப்பிடமாவது, தேதியாவது காணப்பட வில்லையாம். அவைகளை யார் எவ்விடத்திலிருந்து எப்போது எழுதினாள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அந்தக் கடிதத்தில் அடங்கிய விஷயமெல்லாம் காதல் சம்பந்தமாக இருக்கிறதாம். அவருடைய தகப்பனாரான ஜெமீந்தாருக்கும், அந்தக் கடிதங்களை எழுதிய பெண்ணுக்கும் திருட்டுத்தனமான நட்பும், சந்திப்பும் இருந்தனவென்பது நன்றாக வெளியாகிறதாம். அந்தப் பெண்ணுக்குச் சொந்தப் புருஷன் ஒருவன் இருக்கிறான் என்பதும், அவனுக்குத் தெரியாதபடி ரகசியத்தில் அந்தப் பெண்ணும் ஜெமீந்தாரும் ஒருவரையொருவர்சந்தித்து வந்தார்கள் என்பதும் தெரிகிறதாம். கடைசியாக அந்த ஜெமீந்தார் அந்தப்பெண்ணை ரகசியமாகப் பார்க்கப்போன இடத்தில் ஒருவேளை அவளுடைய புருஷன் அவர்களுடைய திருட்டு நட்பைக் கண்டுபிடித்து, அந்தக் கோபத்தினால் ஜெமீந்தாருடைய உயிருக்கு ஹானி தேடியிருப்பானோ என்ற சந்தேகம் ஜெமீந்தாருடைய பிள்ளையின் மனசில் உண்டாகிக் கொண்டிருந்ததாம். அதை என்னிடம் தெரிவிக்கவே அவர் முக்கியமாக இன்று காலையில் என்னிடம் வந்தாராம். வந்த இடத்தில், இந்தக் கடிதத்தின் எழுத்து அவருடைய திருஷ்டியில் பட்டதாம். அந்தக் கடிதங்களின் எழுத்தும், இந்தக் கடிதத்தின் எழுத்தும் ஒரே

மாதிரியாக இருக்கின்றனவாம். அந்தக் கடிதங்களை எழுதிய பெண்ணே இந்தக் கடிதத்தையும் எழுதியிருக்கிறாள் என்று நிச்சயமாகச் சொல்லலாம் ஆகையால், நானும் அவரும் இதைப்பற்றி யோசனை செய்ததில் முக்கியமான ஒரு சம்சயம் தோன்றியது. என்னவென்றால், அந்த ஜெமீந்தாரிடத்தில் கள்ள நட்புக் கொண்டிருந்த பெண் உங்கள் புருஷருக்கும்