பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பூர்ணசந்திரோதயம்-4 உடம்பை அணுவணுவாக வெட்டிக் காக்கைக்கும் கழுவுக்கும் விருந்து நடத்தியிருப்பேன். இந்த லலிதகுமாரிதேவி செய்யும் அக்கிரமங்களைக் காணும்போதெல்லாம் என்னுடைய இரத்தம் கொதிக்கிறது. மனம் பதறுகிறது. உடம்பு ஆவேசம் கொண்டு துடிக்கிறது. என்ன செய்கிறது? நான் அவர்களுடைய அந்தப் புரத்திற்குள் நுழையக் கூடாமலிருப்பதால், நான் என்னை அடக்கிக் கொள்ள நேருகிறது. ஆகையால், இந்த லலிதகுமாரி தேவி செய்யும் அட்டுழியத்துக்குத் தக்கபடி தண்டிக்க உரிமை உள்ளவர்களான தங்களுக்கு நான் இந்தக் கடிதத்தின் மூலமாக எல்லா விஷயங்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன். எது தங்களுக்கு யுக்தமாகத் தோன்றுகிறதோ அதைச் செய்யவும்.

இங்ஙனம், மகாராஜாவிடம் பணிவுள்ள,

ஒர் ஆண் மகன்

என்று எழுதப்பட்டிருந்த விரிவான கடிதத்தை வாய்விட்டுப் படித்த பூர்ணசந்திரோதயம் திடீரென்று ஒரு பெரிய இடி காலடியில் வீழ்ந்ததைக் கண்டு பிரமித்து ஸ்தம்பித்து திகிலே வடிவாக அசைவற்று ஒய்ந்து நிற்பதுபோல, அப்படியே சித்திரப் பாவைபோல மாறிப் போனாள். அவளது வசீகரமான முகம் அளப்பரிய வியப்பை அடைந்து மருண்டு தோன்றியது. அவ்வாறு அவள் மறுமொழி எதுவும் சொல்லமாட்டாதவள் போலக் கால்நாழிகை நேரம் மெளனமாகவே இருந்துதத்தளிக்க, அதைக் கண்ட இளவரசர் ஒருவிதக் கிலேசத்தோடு பேசத் தொடங்கி, “என்ன பூர்ணசந்திரோதயம்! கடிதத்தைப் படித்தாயல்லவா? வேடிக்கை எப்படி இருக்கிறது. பார்த்தாயா? என்னுடைய பட்டமகிஷியான அந்த லலிதகுமாரிதேவி இந்த அரண்மனை சரஸ்வதி மகாலிலுள்ள புஸ்தகங்களுள் படிக்காத புஸ்தகம் ஒன்றுகூட மிச்சமில்லை. கருடபுராணம் முதலிய சகலமான புராணங்களையும் அவள் நன்றாகப் படித்தி ருக்கிறாள். அவள் எம தண்டனைக்கு எவ்வளவு தூரம்