பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பூர்ணசந்திரோதயம்-4 உத்தமியைக் குறித்துச் சொல்லப்பட்டால் என்ன? என்னைக் குறித்துச் சொல்லப்பட்டால் என்ன? இரண்டும் ஒன்றுதான். இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் பொய்யாக இருக்க வேண்டுமே அன்றி ஒருநாளும் நிஜமாக இராது. நான் துணிந்து உறுதியாகச் சொல்லுவேன். இது முதலில்

பூனாவிலிருந்து வந்ததா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. தங்களுக்கும் தங்களுடைய பட்ட மகிஷிக்கும் ஏதோ அற்பமான மனஸ்தாபமிருந்து வருவதாக நான் கேள்வி யுற்றிருக்கிறேன். ஆகையால், அந்த வர்மத்தைப் பாராட்டி தாங்கள் இதுதான் சமயமென்று அந்த மகாராணியை விலக்கி விட்டு என்னை வைத்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு இப்படிச் செய்கிறீர்களென்றே நான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. எனக்குக் காட்டி, என் மனசை மாற்றுவதற்காகவே தாங்கள் இந்தக் கடிதத்தைத்

தயாரித்திருப்பீர்கள் என்ற எண்ணமே என் மனசில் உதிக்கிற

தன்றி தங்கள் பட்டமகிஷி தவறாக நடந்திருப்பார்கள் என்ற

எண்ணத்தையே என் மனம் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்கிறது. மகா உத்தமியான தங்கள் பட்டமகிஷியின்பேரில்

இப்போது எப்படி அவதூறு ஏற்படுகிறதோ அதுபோல

நாளைக்கு என்மேலும் ஏதாவது அபாண்டமான அவதூறு

ஏற்படுமோ என்ற திகில் இப்போதே என் மனசில் எழுகிறது.

இப்படி என் மனம் பரிதவிக்கிற சமயத்தில் நாங்கள்

கொக்கோகம் முதலிய புராணங்களைக் குறித்துப் பேசிப்

பரிகசிப்பது புண்ணில் கோலிடுவதுபோலிருக்கிறதே அன்றி

வேறல்ல. அப்படித்தான் கொக்கோக சாஸ்திரத்தைப் பதிவிரதா ஸ்திரீகள் படிக்கக்கூடாதா? படித்தால் அவர்கள் கெட்டுப்போய்

விடுவார்கள் என்பது கட்டாயமா? அவர்கள் அதிலுள்ள முறைகளைக் கையாடித் தமது புருஷர்களுக்கு முன்னிலும்

பன்மடங்கு அதிகமான சுகமும் சந்தோஷமும் பிறப்பிப்பார்கள்

என்று நினைப்பதே ஒழுங்கன்றி அவர்கள் நெறிதவறி

நடப்பார்கள் என்று நினைப்பது சரியல்ல என்றாள்.