பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 187 பேசிவிட்டதைப் பற்றி மகாராஜா என் மேல் கோபித்துக் கொள்ளக்கூடாது. தங்களுடைய பட்டமகிஷியார் கொஞ்சமும் மாசுமறுவற்ற பரிசுத்தமான நடத்தையுள்ள பதிவிரத சிரோன்மணியென்று சிலர் சொல்லக் கேட்டு, அதை உண்மையென்று நம்பியே நான் இந்தக்கடிதம் அபாண்டமாக சிருஷ்டிக்கப்பட்ட பொய்க் கடிதம் என்றும் வேறு விதமாகவும் மகாராஜாவின் மனம் வருந்தும் படியான வார்த்தைகளைச் சொல்லி விட்டேன். இந்தக் கடிதத்திலுள்ள தபால் முத்திரையைக் கொண்டும், இன்னும் மகாராஜா எடுத்துக் காட்டிய மற்றொரு காரணத்தைக் கொண்டும், இந்தக்கடிதம் பூனாவிலுள்ள யாரோ ஒருவரால் எழுதி அனுப்பப்பட்டுள்ள கடிதம் என்றே நினைக்கிறேன். ஆனால், இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மகாராஜா கவனிக்க வேண்டும். மனிதர் எந்தக் குற்றம் செய்தாலும் இரு திறத்தாருடைய வாக்குமூலங்களையும் அவர்களுடைய சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் கேட்டே நியாயாதிபதிகள் அவருக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். கண்ணுக்கெதிரில் கொலை செய்கிறவர்கள் கூட விசாரணை யில்லாமல் தண்டிக்கப்படு வதில்லை. அப்போது தான், குற்றம்செய்யாத நிரபராதிகள் அநியாயமாகத் தண்டிக்கப்படுதலான நீதித் தவறு ஏற்படாது. ஆனால், இந்த விஷயத்தில் தாங்களும் தங்களுடைய பட்டமகிஷியாரும் வாதிப் பிரதிவாதியாக நியாய ஸ்தலத்தில் போய் நிற்பது நிரம்பவும் விகாரமான விஷயம். ஆதலால், அப்படிச் செய்யாமல், தாங்களேசரியானபடி ஒருவித முடிவுக்கு வரவேண்டியது நியாயமான காரியந்தான். ஆனாலும், தாங்கள் இந்தக் கடிதத்தையே வேதவாக்கியமாக எடுத்துக் கொண்டு உண்மையென்று நம்பி உடனே அவர்களைத் தண்டிப்பது நியாயமாகாது. இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் உண்மைதானா என்பதைச் சந்தேகமற உணர்ந்து கொண்டு அதன்பிறகே எந்தத் தீர்மானத்தையும் செய்வது தருமத்துக் கடுத்ததாக இருக்கும். ஒருவேளை இந்தக் கடிதத்தை