பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 13

யோக்கியமான பெண்கள்; என்னிடம் பொய்யையே பேச மாட்டார்கள். ஆகையால், அவர்கள் சொல்வதையே நாம் வேதவாக்கியமாக நம்பி அவ்வளவோடு திரும்பி வந்துவிடலாம்’ என்றார்.

பூர்ணசந்திரோதயம் மகிழ்ச்சியாகப் புன்னகை செய்தவளாய், ‘சரி; அங்கிருந்து வந்தபிறகு நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுகிறீர்கள்?’ என்று வேடிக்கையாக வினவ, இளவரசரும் உடனே சந்தோஷநகை நகைத்து, “இங்கே வந்தவுடன் நீ செய்ய வேண்டியது ஒன்றுமே இல்ல. உடனே பட்டமகிஷியின் சிம்மாசனத்தில் நீ உட்கார வேண்டும். அதை நீ ஒரு பெரிய பிரயாசையாக நினைக்க மாட்டாய் என்று

நம்புகிறேன்’ என்றார்.

பூர்ணசந்திரோதயம் மகிழ்ச்சியாக நகைத்து, ‘நியாயமான வழியில் ஒரு பொருளைச் சம்பாதிப்பதற்கு மனிதர் எவ்வளவு பிரயாசை ஆனாலும் பின் வாங்காமல் ஏற்றுக்கொள்ளலாம். அநியாய வழியில் ஒரு வஸ்துவை அடைவதென்றால், அது எவ்விதப் பிரயாசையும் இன்றி எளிதில் கிடைப்பதாக இருந்தாலும் அதை நாம் பெறக்கூடாது. ஆகையால், இந்தக் கடிதத்திலுள்ள விஷயம் நிஜமென்று ருஜூவாகுமானால், அதன்பிறகு நான் உடனே தங்களுக்கு மனைவியாகத் தடை யில்லை. மனைவியான பிறகு என்னைத் தாங்கள் பட்ட மகிஷி ஸ்தானத்தில் வைத்தாலும், அடிமை ஸ்தானத்தில் வைத்தாலும், பூஜிதையாக நடத்தினாலும், வேறு எவ்விதமாக நடத்தினாலும், அதை நான் சிரசாக வகித்துத் தங்கள் சித்தப்படி நடந்து கொள்வேன் என்பதைத் தாங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ள லாம். நான் இந்த வாக்குறுதியை மீறி நடக்கவே மாட்டேன். இதைத் தாங்கள் பிரமாணமாக மதிக்கலாம். ஆனால், நானும் தங்களோடு பூனாவுக்கு வருவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. தாங்கள் நேரிலேயே அங்கே போய் அந்தத் தாதிப் பெண்களிடம் உண்மையைத் திருப்திகரமாகத்

go.g.; V-13