பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பூர்ணசந்திரோதயம்-4 தெரிந்துகொண்டு வந்துவிட்டால் அதுவே போதுமானது. இப்படிப்பட்ட பெரிய விஷயத்தில் தாங்கள் உண்மைய்ை மறைத்து ஒருநாளும் பேசமாட்டீர்கள். ஆகையால், தாங்கள் மாத்திரம் போய்விட்டு வருவதே போதுமானது’ என்றாள்.

இளவரசர் வேடிக்கையாகப் பேசத் தொடங்கி, ‘சரி! நீ அவ்வளவு தூரமாவது என் வார்த்தையில் நம்பிக்கை வைப்பதாக ஒப்புக் கொண்டாயே. இனிமேல் எனக்கு நல்ல காலந்தான், துரதேசமாகிய பூனாவுக்குப் போவதும் வருவதும் அதிகப் பிரயாசையான காரியம். ஆகையால், அப்படிப்பட்ட துன்பத்தை உனக்குக் கொடுக்க எனக்கும் இவிடமில்லை. ஆகையால், நீ இவ்விடத்திலேயே வழக்கம்போல இருந்து கொண்டிரு! இங்குள்ளவர்கள் உனக்கு எள்ளளவும் குறை வில்லாமல் பார்த்துக் கொள்ளச் செய்துவிட்டுப் போகிறேன். நான் மாத்திரம் போவது போதாது. என்னுடைய அந்தரங்க நண்பனும், உன்னுடைய காரியதரிசியுமான சாமளராவையும் நான் என்னோடுகூட அழைத்துக்கொண்டு போக உத்தேசிக்கி றேன். அதைப்பற்றி உனக்கு ஏதாவது ஆட்சேபணை உண்டா?” என்றார்.

பூர்ணசந்திரோதயம் “மகாப்பிரபுவாகிய தாங்கள் தனிமையில் போகவேண்டும் என்று யாராவது சொல்லுவார் களா? அந்தரங்கமான ஒரு மனிதர் கூடவே வருவது அத்யா வசியமான காரியமாயிற்றே. அதற்கு யாராவது ஆட்சேபணை சொல்ல முடியுமா? மகாராஜாவின் சித்தம் எப்படியோ அப்படியே எதையும் செய்யத் தடையென்ன?’ என்று நிரம்ப - வும் பணிவாகவும் இனிமையாகவும் மறுமொழி கூறினாள்.

அதன்பிறகு இளவரசர் மேலும் அரை நாழிகை நேரம் அவ்விடத்திலிருந்து பூர்ணசந்திரோதயத்தோட சந்தோஷமாக சம்பாஷித்திருந்து பனாரீஸ் அங்கியால் தம்மை மறைத்துக் கொண்டு சந்தடி செய்யாமல் அவ்விடத்தை விட்டு வெளியில் போய்விட்டார்.