பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - வது அதிகாரம்

எதிர்பாராச் சிக்கல்

இதற்குமுன் 32-வது அதிகாரத்தில் கட்டாரித் தேவன் மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகைக்கு வந்து லீலாவதியோடு பேசிக்கொண்டிருந்ததும், அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கே வந்து அவளோடு பேச விரும்புவதாகச் செய்தி சொல்லி அனுப்பியதும், லீலாவதி கட்டாரித்தேவனை அனுப்பிவிட்டுக் கூடத்துக்கு வந்து இன்ஸ்பெக்டரைக் கண்டு பேசியதும், இன்ஸ்பெக்டர் போனபிறகு அவள் நிரம் பவும் கலக்கம் அடைந்து பின்புறத் தோட்டம் வரையில் போய்க் கட்டாரித்தேவனைத் தேடிக்காணாமல் திரும்பி வந்ததும் விரிவாகக் கூறப்பட்டன அல்லவா. அப்போது கட்டாரித் தேவன் என்ன செய்தான் என்பதையும் கவனிப்போம்.

லீலாவதி இன்ஸ் பெக்டரைப் பார்க்கப் போனபிறகு, தனியாக விடப்பட்ட கட்டாரித்தேவன், தான் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி உடனே சிந்தனை செய்யத் தொடங்கினான். இன்ஸ்பெக்டர் தன்னைப் பிடிப்பதற்காக அங்கே வந்திருப்பாரா, அல்லது, வேறே அலுவலாக வந்திருப்பாரா என்ற சந்தேகமே பெரிதாக எழுந்து அவனை வருத்த ஆரம்பித்தது. தான் அந்த மாளிகைக்குள் வந்ததைக் கண்டு, தனது அடையாளத்தை அறிந்த மனிதர் யாராகிலும் உடனே போய் இன்ஸ்பெக்டரிடம் சொல்ல, அவர் தன்னைப் பிடிப்பதற்காக உடனே புறப்பட்டு வந்திருப்பாரோ என்ற எண்ணம் தோன்றியது. ஆனாலும், அவ்வாறு வந்த இன்ஸ்பெக்டர் ஜெமீந்தாரைக் கண்டு விஷயத்தைச் சொல்லியோ, அல்லது அவர் இல்லாவிடில் மற்ற வேலைக்காரர் களிடம் சொல்லியோ, அனுமதி பெற்று அதன்பிறகு அந்த மாளிகைக்குள் நுழைந்து தன்னைத் தேடிப் பார்ப்பதே சகஜமாக