பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

It S3 பூர்ணசந்திரோதயம்-4 மனிதரையும் காட்டிக் கொடுப்பதாகக் கூறச் செய்து, லீலாவதியைக் காட்டிக் கொடுத்துவிட்டுத் தான் தப்பித்துக் கொள்ளலாம் என்று கட்டாரித்தேவன் முடிவு செய்து கொண்டான். எல்லாவற்றிற்கும் தான் மறுபடியும் ஒருமுறை லீலாவதியைப் பார்த்துத் தந்திரமாகப் பேசி இன்ஸ்பெக்டர் வந்து சம்பாவித்த விஷயத்தைப் பற்றி அவள் என்ன சொல்லுகிறாள் என்பதைத் தெரிந்துகொண்டு சமயோசிதமாக நடந்து அவளைப் பயமுறுத்தித்தனது வேண்டுகோளைப் பூர்த்தி செய்யும் படி வற்புறுத்த வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டான். ஆனால், தன்னை அவள் கண்டுகொள்ளாதபடி அன்றையதினம் முழுதும் அந்த மாளிகைக்குள் மறைந்திருந்து அவருடைய பொக்கிஷப் பெட்டி முதலியவை இருக்கும் இடங்களைத் தெரிந்துகொண்டு அன்றையதினம் இரவில் தனது கையில் அகப்படும் பொருள்களைச் சுருட்டிக் கொண்டு போய்விட்டு மறுநாள் காலையில் மறுபடியும் திரும்பிவந்து அவளைக் கண்டு பேசவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு அந்த மாளிகைக்குள் மேன்மேலும் நுழைந்து ஆராய்ச்சி செய்து கொண்டே போனான். யாராவது மனிதர் வந்த காலடி யோசையோபேசிய குரலோசையோகேட்டால், அவன் பக்கத்தி லுள்ள மறைவான இடங்களிலோ இருண்ட இடங்களிலோ மறைந்து கொண்டிருப்பான். அவர்கள் அப்பால் போனபிறகு அவன் தனது ஆராய்ச்சியில் புகுவான். அவ்வாறு அவன் அன்றையதினம் பகற்பொழுது முழுதையும் போக்கினான். இரவும் வந்தது. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டதானாலும் ஆங்காங்கு ஏராளமான தீபங்கள் பொருத்தப் பெற்றிருந்தன. ஆனால், பகற்பொழுதில் ஒளிந்து கொள்வதைவிட இரவில் ஒளிந்துகொள்வது சுலபமாதலால், அவன் முன்னிலும் அதிக சுயேச்சையோடு ஆராயத் தொடங்கினான் பகற்பொழுதுக்குள் அவன் கீழ் அந்தஸ்திலுள்ள கட்டிடம் முழுதையும் ஆராய்ச்சி செய்து முடித்து விட்டான் . ஆதலால், இரவு வந்தபிறகு, மேன்மாடத்தில் ஏறி அது முழுதையும் ஆராய்ந்துவிட