பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO பூர்ணசந்திரோதயம்-4 மனைவியில்லை என்றும் லீலாவதி அவருடைய தம்பியின் மகளென்றும் அவன் தெரிந்துகொண்டிருந்தவன் ஆகையால், லீலாவதி கிழவரை அண்ணனென்று குறித்ததையும், அவர் அண்ணியைக் கண்டதாகச் சொன்னதையும் கேட்க, அவனுக்குப் பெருத்த குழப்பமும் சந்தேகமும் உண்டாயின.

யாரோ ஒரு பெண்ணைக் கொண்டு வந்து வைத்துக்கொண்டு அவர்கள் ஏதோ மோசம் செய்ய எண்ணுகிறார்கள் என்ற ஓர் எண்ணம் அவனது மனதில் தலைகாட்டத் தொடங்கியது. அவள் யாராக இருக்கலாமென்று அவன் பலவாறு யூகித்துக் கொண்டே இருந்தான். அவள் தனது தமக்கையான கமலம் என்ற ஒரு பெண்ணின் வருகையை நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்ததையும் கட்டாரித்தேவன் சூட்சுமத்தில் கிரகித்துக் கொண்டு அவ்விடத்தில் என்ன நேருகிறதென்று பார்க்க வேண்டுமென்று பெரிதும் ஆவல் கொண்டு எதிர்பார்த்தி ருந்தான். ஜெமீந்தார் அன்றைய தினம் இரவில் மாரியம்மன் கோவிலில் இருந்துவிட்டு வரப்போகிறார் என்று லீலாவதி ஷண்முகவடிவினிடம் சொன்னதைக் கேட்க, அவன் நிரம்பவும் மகிழ்ச்சியடைந்து அவர் அன்றைய தினம் இல்லாதிருந்தால், தனது காரியம் சுலபத்தில் பலிதமடையும் என்று அவன் நினைத்துக்கொண்டே படுத்திருந்தான்.

அதன்பிறகு லீலாவதியும் ஷண்முகவடிவும் பூர்ணசந்தி ரோதயத்தைப் பற்றியும் இளவரசர் விருந்து நடத்துவது முதலியவற்றைப் பற்றியும் ஒருவரோடொருவர் சம்பாஷித்துக் கொண்டிருந்ததை எல்லாம் கட்டாரித்தேவனும் நன்றாகக் கேட்டுக்கொண்டே இருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு வேலைக்காரி ஓடிவந்து கமலம் வந்துவிட்டதாகச் சொல்லி விட்டுப் போக உடனே லீலாவதி ஷண்முகவடிவை அழைத்துக் கொண்டு வெல்வெட்டு மாடத்தின் பின்பக்கத்திலிருந்த கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு அப்பாலிருந்த ரதிகேளி விலாசத்திற்குள் போனதைக் கண்ட கட்டாரித்தேவன், அந்த