பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O i மாடத்தின் பின்பக்கம் எப்படி இருக்கிறதென்பதைப் பார்க்க அதுவே நல்ல சந்தர்ப்பமென்று நினைத்துத் தான் மறைந்திருந்த ஸோபாவைவிட்டு விரைவாக வெளிப்பட்டு, சந்தடி செய்யாமல் கண்ணாடிக் கதவண்டை போய்ச் சேர்ந்தான். லீலாவதி, ஷண்முகவடிவை விசைவைத்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டுத்திரும்பி ஓடிவந்துவிட வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தக் கண்ணாடிக் கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போனாள். ஆகையால், அவளைத் தொடர்ந்து வந்த கட்டாரித்தேவன் மெதுவாக அந்தக் கதவைத் திறந்துகொண்டு ரதிகேளி விலாசத்திற்குள் நுழைந்து கீழே உட்கார்ந்தபடிதரையைத் தடவிக்கொண்டே சென்று, முன்னால் நடந்துபோன இருவரையும் நெருங்கினான். அப்போது வேண்டுமென்றே ரதிகேளி விலாசத்தில் விளக்குகள் கொளுத்தப் படாமல் இருந்ததனால், அங்கு இருள் சூழ்ந்திருந்தது கட்டாரித்தேவனுக்கு நிரம்பவும் அனுகூலமாக இருந்தது. முன்னால் சென்ற லீலாவதி வேலைக்காரர்கள் விளக்குகள் பொருத்தத் தவறிப்போனதைப் பற்றிக் கடிந்து கொண்டதையும், நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளும்படி ஷண்முகவடிவை வேண்டிக் கொண்டதையும் தான் கீழே போய்க் கமலத்தையும் அழைத்துக்கொண்டு விளக்கோடு வருவதாகச் சொன்னதையும் கேட்ட கட்டாரித்தேவன், தான் உடனே எங்கேயாவது மறைந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டு நாற்புறங் களிலும் நகர்ந்து போய்த் தடவிப் பார்த்தான். எங்கு பார்த்தாலும் கட்டில்களும் ஸோபாக்களுமே மயமாக நிறைந்திருந்ததைக் கண்ட கட்டாரித்தேவன், வசதியாகக் காணப்பட்ட ஒரு கட்டிலின் அடியில் புகுந்து அப்பால் சென்று மறைந்து கொண்டான். அதன் பிறகு சிறிது நேரத்தில் ஷண்முகவடிவு நாற்காலியின்மேல் உட்காருவதாகச் சொல்ல, லீலாவதி வெளியில் போவதாகப் பாசாங்கு செய்ததையும், நாற்காலியில் உட்கார்ந்தவள், “ஐயோ! அம்மா’ என்று அலறிக் கூக்குரலிட்டு அழுததையும் கண்ட கட்டாரித்தேவன் பெரிதும் கலக்கமும்