பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O3 அவளை விடுவிக்க வேண்டுமென்ற விருப்பம் கொண்டத னாலும், அந்த விசையைத் தன்னால் விலக்க இயலுமோ இயலாதோ என்ற நினைவினாலும் அப்போது யார்வந்து என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நினைவினாலும், அவன் நிரம்பவும் பாடுபட்டுத் தன்னை அடக்கிக் கொண்டு அந்த இடத்திலேயே சந்தடியின்றிப் படுத்திருந்தான்.

சிறது நேரத்தில் யாரோஒருவர்.அந்த அறைக்குள் வந்த காலடி ஒசையைக் கேட்ட கட்டாரித்தேவன் அதை நன்றாகக் கவனித்தபடியே இருந்தான். அப்படி வந்த மனிதர் ஷண்முக வடிவு இருந்த இடத்திற்கு அருகில் போனதையும், அவள் உடனே அவரோடு பேசித் தன்னை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டதையும் அவன் உணர்ந்தான். உடனே ஜெமீந்தார் தாம் இன்னார் என்பதையும் தமது கருத்து இன்னதென்பதையும் வெளியிட்டதையும் அதைக்கேட்ட அந்தப் பெண் அளவற்ற திகிலும் வியப்பும் அடைந்து, பலவகையான நியாயங்களை எடுத்துச் சொல்லி தான் அவரது கருத்துக்கு இணங்க இயலாதென்று கூறி மறுத்ததையும், ஜெமீந்தார் மேன்மேலும் அவளை எப்படியும் அடைய உறுதி செய்துகொண்டிருப்பதாகக் கூறிக் காமாதுர மொழிகளைச் சொன்னதையும் கேட்ட கட்டாரித்தேவனது மனதில் பலவகைப்பட்ட உணர்ச்சிகளும் எண்ணங்களும் பொங்கி எழுந்து மூர்க்கமாக வதைக்கத் தொடங்கின. இளம் பிராயப் பெண்ணான அவளிடத்தில் ஜெமீந்தார்மோகாவேசமான சொற்களைக் கூறக்கூற, அவைகள் நிரம்பவும் முரடனான கட்டாரித்தேவனது மனதில் பலவித விகாரங்களையும் துன்மார்க்கமான நினைவுகளையும் கிளப்பி விட்டனவாதலால், அவனது நிலைமை மதங்கொண்ட யானையினது நிலைமை போலக் கட்டுக்கடங்காத அசாத்தியமான தாயிற்று. அந்த மோக விகார உணர்ச்சியோடு கூட, அநாதரவாக அகப்பட்டுக்கொண்ட மகாநற்குணவதியான