பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கே. துரைசாமி ஐயங்கார் 2O5 அவரது கிலியை ஆயிரம் மடங்கு பெருக்கியது. அவரது வாய் குழறியது. உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் ஒவ்வோர் அணுவும் பம்பரம்போல விர்றென்று சுழன்று அவரை மரண வேதனைக்கு ஆளாக்கியது. அவரது மனதில் பலவிதமான எண்ணங்களும் திகிலும் தோன்றின. ஆனாலும், அவ்வாறு திடீரென்று வந்த மனிதனுக்கும் ஷண்முகவடிவுக்கும் ஒருவித சம்பந்தமும் இராது என்ற எண்ணம் மாத்திரம் அவரது மனதில் உடனே தெளிவாக உண்டாகிவிட்டது. அவன் தமது மாளிகையில் கொள்ளையடிக்க வந்த திருடனாகத்தான் இருக்க வேண்டும் என்றும், அவன் தற்செயலாக அங்கே ஒளிந்திருந்து, தமக்கும் ஷண்முகவடிவுக்கும் நடந்த சச்சரவைக் கேட்டுக் கொண்டிருந்து, அந்தத் தருணத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டுமென்றும் அவர் முடிவு செய்துகொண்டார். அவன் ஒருவனாக அங்கே வந்திருந்தாலும் அவனைச் சேர்ந்த ஆட்கள் பலரும் வந்து பக்கங்களில் இருக்க வேண்டுமென்றும் அவர் எண்ணிக் கொண்டவராய், அவனிடம் தாம் நன்மையாகவே பேசி அவனை அனுப்பிவிட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டு மெதுவாக அவனை நோக்கி நயமாகப் பேசத் தொடங்கி, “அடேய் யாரப்பா அது? நான் சொல்வதைக் கேள். அவசரப்பட்டு எனக்கு நீ யாதொரு தொந்தரவும் செய்துவிடாதே. நீ இந்த அகால வேளையில் இங்கே வந்திருப்பதிலிருந்தும், முகமூடி போட்டுக் கொண்டிருப்பதிலிருந்தும், நீ இங்குள்ள பொருளை அபகரித்துக் கொண்டுபோக வந்த திருடன் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. உனக்குத் தகுந்தபடி நானே சன்மானம் செய்து அனுப்புகிறேன். நீ எங்களை எல்லாம் வற்புறுத்த வேண்டிய அவசியமும் இல்லை. எங்கே பணமிருக்கிறது என்று தேடவேண்டிய பிரயாசையும் உனக்குத் தேவையில்லை. ஆகையால், நீ என்னை இந்த நாற்காலியிலிருந்து விடுவிப் பாயானால், என்னுடைய சட்டைப் பையிலுள்ள நோட்டுகளை எல்லாம் அப்படியே உன்னிடம் எடுத்துக் கொடுத்துவிடுகிறேன். சுமார் இரண்டாயிரம் ரூபாய் பெறுமான