பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17

என்றும் அவள் நினைத்தாள். ஆனால், தான் தனது கையெழுத்தை வேறாக மாற்றியே, எல்லாக் கடிதங்களையும் எழுதியிருப்பதால், தான் ஒருவாறு வாதாடலாம் என்ற துணிவும் உண்டாயிற்று. அப்படியிருந்தாலும், தான் எப்படி யாவது தந்திரம் செய்து இன்ஸ் பெக்டரிடத்திலிருந்த தனது அநாமதேயக் கடிதத்தை வாங்கிக் கிழித் தெறிந்து விட வேண்டுமென்ற யோசனையும் தோன்றியது ஆகையால், அவள் தனது சங்கடங்களையும் குழப்பத்தையும் ஒருவாறு அடக்கிக் கொண்டவளாய் அவரை நோக்கி நிரம் பவும் துக்ககரமாகவும் அனுதாபத்தோடும் பேசத்தொடங்கி, “ஐயா! நீங்கள் சொல்லும் வரலாறு நிரம் பவும் ஆச்சரியகரமாக இருக்கிறது. என்னுடைய புருஷர் மாரியம்மன் கோவிலில் இருக்கிறார் என்பதை எப்படியோ நீங்களே தெரிந்து கொண்டுவந்து அவரைப் பிடித்துக் கொண்டு போனிர்கள் என்று நான் இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் சற்றுமுன் ஒரு தடவையும், இப்போது ஒரு தடவையும் சொன்னதைக் கேட்டபிறகுதான், ஏதோ ஒர் அநாமதேயக் கடிதம் எழுதப்பட்டு அதன் பலனாக என் புருஷர் பிடிபட்டார் என்ற விவரம் எனக்குத் தெரிகிறது. என் புருஷர் வேறுபல ஸ்திரீகளி னிடத்தில் அந்தரங்கமான சிநேகம் வைத்துக் கொண்டி ருக்கிறாரென்று நான் சந்தேகப்படும்படி அவர் பல தடவைகளில் நடந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் என்னிடம் நேரில் சொன்ன உறுதியை நான் இதுவரையில் நம்பி அவர் சுத்தமான மனிதர் என்று நினைத்திருந்தேன். இப்போது நீங்கள் சொன்னதைக் கேட்டபிறகு நான் அவர் மேல் கொண்ட சந்தேகம் உண்மையானது என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் நீங்கள் அந்த அநாமதேயக் கடிதத்தை இரண்டொரு நாளைக்கு என்னிடம் கொடுத்து வையுங்கள். நான் அதைப் பார்த்து அது யாரால் எழுதப்பட்டது என்பதைக் கண்டுபிடித்து முடிவை அதி சீக்கிரத்தில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்றாள்.