பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O7 என்ற அச்சமும் ஏக்கமும் உண்டாகிவிட்டன. அவர் முன்னிலும் நயமாகவும், கெஞ்சலாகவும் பேசத் தொடங்கி, ‘அப்பா! என்னிடத்திலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நீ இப்போது எடுத்துக் கொண்டு போய்விட்டால் அதன்பிறகு நான் ஏழையாகி விட மாட்டேனா! அப்படி ஏழையாகி விடும் காலத்தில் நீ மறுபடியும் வந்தால், நான் உனக்கு எதைக் கொடுக்கிறது? அடியோடு மரத்தை வெட்டுவதைவிட ஒவ்வொரு பருவத்திலும் அதில் பழுக்கும் பழங்களைப் பறித்துக்கொண்டு போவதே புத்திசாலித் தனமல்லவா? ஆகையால், நீ இப்போது நான் கொடுப்பதை எடுத்துக்கொண்டுபோ. இது போதா விட்டால், அடுத்த அறையிலுள்ள மேஜைக்குள் இன்னொரு மூவாயிரம் ரூபாய் வைத்திருக்கிறேன். அதையும் தருகிறேன். வாங்கிக்கொண்டு அவ்வளவோடு போய்விடு. மறுபடி வந்து

இன்னும் கொண்டு போகலாம்” என்றார். -

கட்டாரித்தேவன், ‘அதெல்லாம் பலியாது ஐயாவே எடும் திறவுகோலை. இப்போது எல்லாவற்றையும் ஒரு முட்டாகக் கொண்டு போனால், நான் அடிக்கடி வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டியதில்லை அல்லவா என்றான்.

ஜெமீந்தார், “சரி! நீ சொல்லுகிறபடியே திறவுகோலிருக்கும் இடத்தைக் காட்டுகிறேன். என்னை இந்த நாற்காலியிலிருந்து விடுவி’ என்றார்.

கட்டாரித்தேவன், ‘ஓகோ நான் விடுவித்த பிறகு திறவு கோலைத் தேடுவதுபோலப் பாசாங்கு செய்து வேலைக்காரர் களை அழைக்கும் மணியை அசைத்து ஆள்களை வருவிப்பதற்காக இப்படிச் சொல்லுகிறீரா? அதெல்லாம் என்னிடம் பலியாது. திறவுகோலிருக்கும் இடத்தைச் சொல்லும். நானே போய் எடுத்துக்கொள்ளுகிறேன். அதைச் சொல்லாவிட்டால், இந்த நாற்காலியிலேயே உம்மை இரண்டு துண்டாக வெட்டிப் போட்டுவிடுவேன்’ என்று கூறித் தனது மடிக்குள் தொங்கவிட்டுக் கொண்டிருந்த பீச்சாங் கத்தியை go.3.IV-14 -