பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பூர்ணசந்திரோதயம்-4 என்னைப் பிடித்துக் கொள்ளட்டும். நான்உம்முடைய இரும்புப் பெட்டியிலுள்ள சகலமான சொத்துக்களையும் எடுத்து மூட்டை யாகக் கட்டி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். குறைந்தது ஒரு கோடி ரூபாய் பெறுமான திரவியம் அதில் இருக்கலாம். அவ்வளவு சொத்துக்களையும் நான் மாத்திரம் அனுபவிப்பதில் சுகமில்லை. இங்கே இருந்த பெண்ணை நீர் அனுப்பிவிட்டீர் ஆகையால், நான் நேராகப் போய் உம்முடைய தம்பி மகளான லீலாவதியைக் கட்டித் தூக்கிக் கொண்டு போய் விடுகிறேன். அவளும் நல்ல ராஜாத்தி போலவே இருக்கிறாள். இவ்வளவு அபாரமான சொத்தையும் வைத்து அனுபவிக்க அவளும் தகுதியானவளே’ என்று கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டுப்போய் வெல்வெட்டு மாடத்தை அடைந்து, அவ்விடத்தில் ஜெமீந்தார் குறித்த இடத்தில் மறைந்து கொண்டிருந்த லீலாவதியைப் பிடித்துக் கைககால்களை எல்லாம் கட்டி வாயில் துணியை அடைத்து, அவளைத் துக்கித் தனது மார்பில் சாத்திக்கொண்டு, நோட்டுகளும் ஆபரணங் களும் அடங்கிய பெருத்த மூட்டையை அலட்சியமாக இன்னொரு கையால் தூக்கிக் கொண்டு வெளியில் சென்று, இரும்புப் பெட்டியைப் பூட்டியிருந்த கெட்டியான பூட்டால் வெல் வெட்டு மாடத்தின் வெளிக்கதவைப் பூட்டித் திறவு கோலை எடுத்துக்கொண்டு கீழே போய், வெளிவாசலில்துங்கி விழுந்தபடி இருந்த பாராக்காரனைச் சுலபத்தில் கடந்து அப்பால் போய்விட்டான். .