பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 217

அதே கூடிணத்தில் ராஜவீதியில் ஒரு பெருத்த கூக்குரலுண் டாயிற்று. ‘விடாதே; பிடி பிடி; இதோ ஒடுகிறாள். அதோ ஒடுகிறாள்’ என்று போலீசார் கத்திக்கொண்டு ஓடி வந்ததாகத் தெரிந்தது. அந்த ஆரவாரத்தைக் கேட்ட ஷண்முகவடிவினது தேகம் கிடுகிடென்று ஆடியது. உரோமம் சிலிர்த்தது. இன்னதென்று அறிய முடியாத ஒருவித திகிலும் அபாரமான கலக்கமும் எழுந்து அவளது மனதில் கப்பிக் கொண்டன. கால்கள் பூமியில் நிலைக்காமல் தள்ளாடித்துவள்கின்றன. தான் ஒடுவதா நிற்பதா என்பதை நிச்சயிக்கமாட்டாமல் அவள் சிறிது நேரம் சிந்தித்துத் தயங்கியிருக்க, அடுத்த நொடியில் போலீசார், அவளிருந்த திக்கில் ராஜபாட்டையோடு யாரையோ துரத்திக் கொண்டு ஓடிவருவதாகத் தோன்றியது. அப்போது தான் அவ்விடத்தில் இருப்பது தவறென்றும், சந்திற்குள் நுழைந்து முதல் வீட்டுத் திண்ணையில் ஏறி ஒளிந்து கொண்டிருந்தால் போலீசார் போய் விடுவார்கள் என்றும் அதன்பிறகு தான் சாவதானமாகப் போய்ச் சேரலாமென்றும் நினைத்தவளாய் நமது இளநங்கை விரைவாக அந்தச் சந்திற்குள் புகுந்து ஆரம்பத்திலிருந்த ஒரு வீட்டின் திண்ணையிலேறி அதன் கோடிக்குப் போய் சுவரோடு சுவராக மூலையில் ஒன்றி உட்கார்ந்து கொண்டு போலீசார் ராஜபாட்டையோடு அந்தச் சந்திற்கு அப்பால் போகிறார்களா என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அடுத்த கூடிணத்தில் ராஜபாட்டையிலிருந்து அந்தச் சந்திற்குள் யாரோ ஒரு பெண்பிள்ளை தடதடவென்று தலைவிரிகோலமாக ஓடி வந்ததை ஷண்முகவடிவு கண்டாள். அப்படி ஓடிவந்தவள் அம்பு பாய்வதுபோல ஒரே வேகமாக ஒடி நாலைந்து வீடுகளுக்கு அப்பாலிருந்த ஏதோ ஒரு வீட்டிற்குள் நுழைந்து கொண்டதாகத் தெரிந்தது. அவளுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்த கதவும் ஒசையின்றி மூடி உட்புறம் தாளிடப்பட்டதையும் அவள் உணர்ந்தாள். ஆனால், அந்தப் பெண்பிள்ளை நுழைந்தது இன்ன வீடுதான் என்பதை அவள் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளக் கூடாமல் போய் விட்டது.