பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 219 இன்ணையில் வந்து ஒளிந்துகொண்டால், உன்னைவிட்டு விடுவோம் என்று எண்ணிக் கொண்டாயா? இறங்கடி கீழே’ என்று முரட்டுத்தனமாகவும் அதிகாரமாகவும் கூறி அவளை அதட்டினான்.

அப்போது ஷண்முகவடிவினது மெல்லிய தேகம் காற்றில் அசையும் மாந்தளிர்போல நடுநடுங்கிக் கொண்டிருந்தது. அவளது மனம் இன்னது செய்வதென்பதை அறியாமல் தத்தளித்தது. அறிவு தள்ளாடியது. “ஆகா! தெய்வமே கொஞ்ச நேரத்துக்கு முன் தானே இரண்டு பெரிய கண்டங்களிலிருந்து என்னைக் காத்து ரrத்தாய்! இப்போது மறுபடியும் என்னை எவ்விதமான புதிய துன்பத்தில் மாட்டிவிட எண்ணுகிறாயோ! தெரியவில்லையே! ஹா! நான் என்ன செய்வேன்! கொஞ்ச நேரத்துக்குமுன் இங்கே யாரோஒரு பெண்பிள்ளைஓடினாளே! அவளையல்லவா இந்தப் போலீசார் துரத்திக் கொண்டு வந்தார்கள். இவர்கள் நான்தான் அந்தப் பெண்பிள்ளையென்று தவறாக எண்ணிக் கொண்டல்லவா என்னை வைது பயமுறுத்தி அழைக்கிறார்கள். அந்தப் பெண்பிள்ளை என்ன குற்றம் செய்து விட்டு ஓடிவந்தாளோ தெரியவில்லையே நான் வேறு மனிஷியென்று சொன்னால் என்வார்த்தையை இவர்கள் எப்படி நம்புவார்கள் ஈசுவரா! அழிப்பதும் உன் செயல், ஆக்குவதும் உன் செயல், துன்பத்தில் விடுப்பவனும் நீ! அதைத் தடுப்பவனும் நீ; ஏழையாகிய என்னால் ஆவது ஒன்றுமில்லை. நான் திருவுள்ளமாகிய சண்டமாருதத்தில் அகப்பட்டு சுழன்று தடுமாறித் தத்தளிக்கும் ஒரு சருகுக்குச் சமமானவள். உன் திருவருள் என்னை எந்த வழியில் விடுத்தாலும், விடட்டும்’ என்று தனக்குள் சிந்தித்துக் கரை கடந்து கலங்கி நாணிக் கிலேசமுற்றுப் பின்புறம் திரும்பிப் பார்க்கவும் வெட்கித்தலை குனிந்து கொண்டவளாய் வதைபட்டிருக்க, அதற்குள்ளே போலீசார் திண்ணையின்மீது ஏறி அவளண்டை நெருங்கி வந்து விட்டனர். அவர்களுள் ஒருவன், ‘அடி பெண்பிள்ளை