பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பூர்ணசந்திரோதயம்-4 கடங்கா ஆத்திரமும் அருவருப்பும் அடைந்தனர். அந்தக் குழந்தையின் கழுத்து திருகப்பட்டிருந்தது. ஆகையால், முகம் முதுகுப் பக்கம் திருகப்பட்டிருந்தது. குழந்தை குண்டாகவும் பருமனாகவும் நிரம்பவும் அழகுடையதாகவும் இருந்தமை யால், ஜனங்கள் அதன்கோரமான நிலைமையைக் கண்டு கரைகடந்த இரக்கமும் அனுதாபமும் துயரமும் மனக் கொதிப்பும் அடைந்து, அங்கே இருந்த யெளவன ஸ்திரீயான நமது ஷண்முகவடிவுதான் அதைப் பெற்று கொன்று போட்டிருக்கிறாள் என்று எளிதில் யூகித்துக் கொண்டு அவளைத் தாறுமாறாகத் தூவிக்கத் தொடங்கினர். உடனே போலீசாருள் ஒருவன் ஜனங்களை நோக்கி, ‘ஊர்கெட்ட கேட்டைப் பாருங்களையா! நாங்கள் ரோந்து சுற்றிக்கொண்டு பக்கத்து சந்தின் வழியாக ராஜபாட்டைக்கு வந்து கொண்டிருந்தோம். யாரோ ஒரு பெண்பிள்ளை எங்களைக் கண்டு தன் கையிலிருந்த இந்த மூட்டையைக் கீழே போட்டுவிட்டு ஓடினாள். நாங்கள் சந்தேகப்பட்டு உடனே ஓடிவந்து மூட்டையைப் பிரித்தால், கொல்லப்பட்ட குழந்தை உள்ளே இருந்தது. உடனே அதை எடுத்துக்கொண்டு அவளைத் துரத்தினோம். அவள் ஓடிவந்து இந்தச்சந்தில் புகுந்தாள். நாங்கள் பின்னால் துரத்திக்கொண்டே வந்து பார்க்கிறோம். அவள் இந்தத் திண்ணை மூலையில் ஒளிந்துகொண்டு மகா யோக்கியமான மனுவிபோல நாணிக்கோணி நிற்கிறாள், பாருங்கள் ஐயா என்ன அக்கிரமம் இது இப்படிப்பட்ட அட்டுழியம் நடக்குமானால், ஊரில் எப்படி ஐயாமழை பெய்யும்?’ என்றான்.

அதைக்கேட்ட ஜனங்களெல்லோரும் அந்த வரலாற்றை உண்மையென்றே நம்பி ஷண்முகவடிவுதான் அவ்வாறு கொலை செய்தாள் என்று நிச்சயித்துக்கொண்டு அவளைத் தாறுமாறாகத் தூவிக்கலாயினர். ஒருவன், ‘அடடா குழந்தை மகாராஜா வீட்டுக் குழந்தைபோல் அல்லவா தங்கப் பதுமை போல இருக்கிறது! இதைக்கொல்ல இந்தக் கெட்டமுண்டைக்கு