பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 223 எப்படித்தான் மனம் துணிந்ததோ!” என்றான். இன்னொருவன், ஆஹா எத்தனையோஜனங்கள் குழந்தைகளுக்காக ஏங்கி, காசி ராமேசுவரம் போகிறார்கள்! அரசமரத்தை எல்லாம் வேறோடு பிடுங்குகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு குழந்தை பிறக்க மாட்டேன் என்கிறது. குழந்தையின் அருமை தெரியாத இப்படிப்பட்ட ராrசிகளின் வயிற்றில்தானா குழந்தைகள் வந்து பிறக்க வேண்டும்! சாமிக்குக் கண்ணில்லை ஐயா! கண்ணிருந்தால் இந்த மாதிரி நடக்கப் பார்த்துக் கொண்டிருக்குமா?’ என்றான். மற்றொருவன் ஷண்முக வடிவை முகம் முதல் நகம் வரையில் ஏற இறங்க இரண்டொரு தரம் கூர்ந்து நோக்கிக் கோபப் புன்னகை செய்து பல்லை நறநறவென்று கடித்தவனாய், “ஆசாமி வாட்டசாட்டமாக எப்படி இருக்கிறாள் பாருங்கள் ஐயா! தூ! வெட்கம் கெட்ட முண்டை உனக்கு அழகென்ன வேண்டியிருக்கிறது? ஊரார் குடியைக் கெடுக்கிற இப்படிப்பட்ட பேய்களையெல்லாம் உயிரோடு கழுவில் ஏற்றி விட்டால்கூட பாபமில்லை ஐயா!’ என்றான். இன்னொருவன் அவளிடம் இரக்கம் கொண்டவன் போல நடந்து, “சேச்சே! அப்படி இருக்காதப்பா இந்தப் பெண்பிள்ளையைப் பார்த்தால், நல்ல ஒழுங்கான நடத்தை யுள்ளவள்போல இருக்கிறதே!’ என்றான்.

இவ்வாறு ஜனங்கள் எல்லோரும் தத்தம் வாயில் வந்த விதம் அபிப்பிராயம் கொடுக்க மூலைக்கொன்றாக வந்து தன்மீது பாய்ந்த அவர்களது கொடிய சொல்லம்புகள் சுருக்கென்று நமது யெளவனப் பெண்மணியின் செவியில் பாய்ந்து அவளது உயிரைப்பருகத் த்ொடங்கின. அவளது எண்சாண்உடம்பும் ஒரு சாணாகக் குறுகியது. அவள் மிதமிஞ்சிய வெட்கமும், துக்கமும், அவமானமும் கோபமும் அடைந்தவளாய்க் கீழே குனிந்த சிரத்தினளாய் நின்ற ப்டி போலீசாரை விளித்து, “ஐயா! ஆத்திரப் படாதீர்கள். நீங்கள் யாரைத் துரத்திக்கொண்டு வந்தீர்களேர் அவள் கொஞ்ச நேரத்துக்கு முன் இந்தச் சந்தின் ”. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 5 . .