பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 225 கொஞ்சநேரத்துக்கு முன் இந்தச்சந்தின்வழியாக ஒடினதை நான் பார்த்தேன். அவளை விட்டு நீங்கள் என்னைப் பிடித்துக் கொண்டீர்கள். நான் ஒரு பாவத்தையும் அறியேன்’ என்று நிரம் பவும் தழுதழுத்த இளக்கமான குரலில் மிகமிகப் பரிதாபகரமாகக் கூறினாள். அவளது கண்களில் கண்ணிர் பொங்கித் தாரைதாரையாகக் கன்னங்களில் வழிந்தது. அவளது உடம்பு வெடவெடவென்று ஆடியது. அவள் சிறிதும் கல்மஷ மற்ற மகாபரிசுத்தமான உத்தமியென்று அவளது முகத் தோற்றத்திலும் அவள் சொன்ன வார்த்தைகளிலும் பரிஷ்காரமாக விளங்கியது. அதைக் கேட்ட ஜனங்களில் பெரும்பாலோர் அந்தவரலாறு உண்மையானதாய் இருக்கலாம் என்ற நம்பிக்கையும், அவளது விஷயத்தில் ஒருவித இரக்கமும் கொண்டனர். ஆனால் போலீசார் அவள் யாரோ வேசை யென்றும், அவ்வளவு பெருத்த கொலைக் குற்றத்தைச் செய்யக் கூடியவள் அதை மறைப்பதற்கு ஏதோ ஒரு சமாதானம் சொல்லத் தெரிந்து கொள்ளாமலா இருப்பாளென்றும் நினைத்து அவளது சொல்லை நம் பாமல் அவளை வருத்தத் தொடங்கினர். போலீசார் தலைவன் அவளை நோக்கி, ‘உன்னைப் போல நாங்கள் இதுவரையில் எத்தனையோ குற்றவாளிகளைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருக்கிறோம். அவர்கள் எல்லோரும் இப்படித்தான் சொல்லிக் கொண்டார்களன்றி குற்றத்தை ஒப்புக் கொண்டதே கிடையாது. அதுபோல நீயும் செய்கிறாய். உன் பேச்சின் மேல்உன்னை நாங்கள் விட்டுவிட முடியாது. நீ இந்தக் குழந்தை மூட்டையைப் போட்டுவிட்டு நேராக ஓடிவந்து இங்கே மறைந்து கொண்டதை நாங்கள் கண்ணாரக் கண்டு உன்னை இத்தனை ஜனங்களுக்கு எதிரில் இந்த மூலையி விருந்து பிடித்திருக்கிறோம். நாங்கள் நியாயாதிபதியிடம் உன்னைக் கொண்டுபோய் ஆஜர்செய்து, நாங்கள் கண்டதைச் சொல்லுகிறோம். நீ உன்னுடைய நியாயத்தை அவ்விடத்தில் எடுத்துச்சொல்லி, குற்றமற்றவள் என்று மெய்ப்பித்துத் தப்பித்துக் கொண்டு போவதைப்பற்றி எங்களுக்கு யாதொரு