பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பூர்ணசந்திரோதயம்-4 சாலைக்குள் அனுப்பி, ஷண்முகவடிவை நன்றாகப் பரீட்சிக்கச் செய்ய அவர்கள் இருவரும் அரைநாழிகை சாவகாசம் ஷண்முக வடிவோடு தனியாக இருந்தபின் வெளியில் வந்து அந்தப் பெண்ணினிடத்தில் பிரசவ குறிகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அவள் கன்னி கழியாத பரிசுத்தமான பெண்ணென்றும் அபிப்பிராயம் கொடுத்தனர்.

அதைக்கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் உடனே ஷண்முக வடிவைச் சிறை நீக்கி வெளியில் அழைத்து வரும்படி உத்தரவு பிறப்பித்தார். உடனே ஜவான் ஒருவன் ஒடிப்போய் மரியாதை யாக ஷண்முகவடிவை வெளியில் அழைத்துவர, அவள் இன்ஸ்பெக்டருக்கு முன்னால் வந்து சிறிதுதுரத்திற்கு அப்பால் நாணிக் குனிந்து நின்றாள். அவளைக் கண்ட இன்ஸ்பெக்டர் நிரம்பவும் அன்பாகவும் உண்மையான விசனத்தோடும் பேசத்’ தொடங்கி, ‘அம்மா இந்தக் குழந்தைக்கும் உனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்பது சந்தேகமறத் தெரிகிறது. நீ குற்றமற்றவள் என்றே நான் நினைக்கிறேன். எங்களுடைய ஜவான்கள் அவளைத் துரத்திக்கொண்டு ஓடி வந்த சமயத்தில் நீ இடைநடுவில் அகப்பட்டுக் கொண்டாய். ஆதலால், நீ ஒளிந்து கொண்டிருந்ததைக் கொண்டு நீ தான் குற்றவாளி என்று சந்தேகித்து உன்னை அழைத்து வந்து உனக்கு அநாவசியமான துன்பம் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் மேலும் நாம் கோபித்துக்கொள்ள நியாயமில்லை. ஆனாலும், உன் மேல் ஏற்பட்ட இந்த அபாண்டப் பழியைப்பற்றி நான் நிரம்பவும் விசனமடைகிறேன். உன்னை இனி நாங்கள் இவ்விடத்தில் வைத்திருக்க வேண்டிய பிரமேயமே இல்லை. இனி உன்னிஷ்டப்படிநீ எங்கே போகப் பிரியப்படுகிறாயோ அங்கே போகலாம். ஆனால் ஒரு விஷயம். நீயோ அறியாத பெண். இப்போதோ நடு இரவு. நீ இவ்விடத்தைவிட்டுத் தனியாக எங்கேயும் போவது உசிதமாகத் தோன்றவில்லை. இந்த இரவு முழுதும் நீ இவ்விடத்திலேயே பத்திரமாக இரு உனக்குத்