பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பூர்ணசந்திரோதயம்-4 இலக்கமுள்ள வீடென்று தன்னைக் கோலாப்பூரிலிருந்து அழைத்துவந்த ஸ்திரீ சொன்னாள். ஆதலால், தான் மறுபடியும் அவ்விடத்துக்கே போக நேருமோவென்ற சந்தேகமும் அவளது மனதில் தோன்றியது. தன்னை நாற்காலியில் மாட்டிவிட்டுத் தன்னிடம் துராகிருதமான காரியம் செய்ய முயற்சித்த மனிதர்தான் சோமசுந்தரம்பிள்ளையா, அல்லது அவர் வேறே அன்னியரா என்ற சந்தேகமும் அவளது மனதை வதைத்தது. தான் அவர்களோடு பழகிய காலத்தில் கண்ணம்மாள் என்ற பெண் சோமசுந்தரம்பிள்ளை என்பவரின் தங்கையென்று அவர்கள் குறித்ததும், அதன்பிறகு திருடனிடத்தில் அதே கிழவர், அந்தப் பெண் தனது தம்பியின் மகளான லீலாவதியென்று சொன்னதும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டன. ஆதலால், அவர்உண்மையில் சோமசுந்தரம் பிள்ளையாக இருக்க மாட்டார் என்ற எண்ணமே உண்டாயிற்று. அப்படியானால், தன்னைக் கோலாப்பூரிலிருந்து அழைத்து வந்த ஸ்திரீயும் மோசக்காரியாக இருக்க வேண்டும். அவள் கோலாப்பூரில் செய்த காரிய மெல்லாம் இதுபோலவே வஞ்சகச் செயல்களாக இருக்க வேண்டுமென்றும், தனது ஆருயிர்க் காதலனான கலியான சுந்தரம் ஏதோ மோசத்திற்குள்ளாகி இருக்க வேண்டும் என்றும், அவள் பற்பலவிதமாக யூகித்துக் கொண்டாள். ஆனால், அவளுக்கு முக்கியமாக ஒரு விஷயம் மாத்திரம். மிகுந்த வியப்பையும் சந்தேகத்தையும் உண்டாக்கியது. அந்த வஞ்சக மனிதர்களெல்லோரும் கமலத்தின் வரலாறுகளையும் தனது குடும்பத்தின் வரலாறுகளையும் எப்படி அறிந்து கொண்டிருப் பார்கள் என்ற விஷயமே அவளுக்குச் சிறிதும் விளங்காமல் இருந்தது. எப்படியும் அந்த இன்ஸ்பெக்டர் நன்றாக விசாரித்துத் தனது அக்காளைப் பற்றிய மர்மங்களையெல்லாம் வெகு சீக்கிரத்தில் அறிந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் தைரியமும் அவளது மனதில் வேரூன்றி நின்றன. ஆதலால், அத்தகைய மனநிலைமையோடு அவள் இன்ஸ்பெக்டரைத் தொடர்ந்து, மேலே குறிக்கப்பட்டபடி சக்கா நாயக்கர் தெரு 13வது