பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 233 இலக்கமுள்ளவீட்டை அடைந்தாள் அடைந்தவள், ‘இதுதானா சக்கா நாயக்கர் தெரு?’ என்றாள்.

இன்ஸ்பெக்டர், ‘ஆம் இதுதான்’ என்று கூறியவண்ணம் பக்கத்திலிருந்த வீட்டுக் கதவண்டை போய் நின்று, தமது கையிலிருந்த லாந்தரைக் கதவிலக்கத்தின் பக்கம் திருப்பி, அதைப் பார்த்தார். 13 என்ற இலக்கம் காணப்பட்டது. “சரி: இதுதான் அந்த வீடு’ என்றார் இன்ஸ்பெக்டர்.

அப்போது ஷண்முகவடிவினது நெஞ்சு தடதடவென்று அடித்துக்கொண்டது. மனம் பலவித எண்ணங்களாலும் சந்தேகங்களாலும் குழம்பித் தவித்தது. அவள் உடனே தனது பார்வையை நாற் புறங்களிலும் திருப்பி, அந்த வீதியின் அமைப்பையும், அந்த வீட்டின் தோற்றத்தையும் கூர்ந்து கவனித்தவளாய், ‘என்னை நாற்காலியில் மாட்டிய மனிதரு டைய மாளிகை இதுவல்ல. அந்த மாளிகை இருந்த வீதியும் பெரிய ராஜ வீதியாக இருந்தது. என்னை உங்களுடைய ஜெவான்கள் பிடித்தது கிழக்கு ராஜவீதி என்றல்லவா அவர்கள் சொல்லிக் கொண்டார்கள். அதிலிருந்து பார்த்தால், அந்த மாளிகை இருந்த வீதி வடக்கு ராஜ வீதியாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் இந்த வீதியையும், இந்த வீட்டையும் நான் இதற்கு முன் பார்த்திருப்பதாகவே எனக்கு நினைவுண்டாகிறது. ஆம், ஆம். என்னைக் கோலாப்பூரிலிருந்து அழைத்துவந்த ஸ்திரீ இந்த வீட்டில்தான் வந்திறங்கினாள். இதுதான் அவளுடைய வீடென்று அவள் சொன்னாள்’ என்று மிகுந்த ஆச்சரியத்தோடு கூறினாள்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டரும் ஆச்சரியமடைந்தவராய், ‘ஒகோ அப்படியா கோலாப்பூரிலிருந்து உன்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்தவள் உன்னை சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமுள்ள வீட்டிலுள்ள சோமசுந்தரம் பிள்ளையிடம் அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்லியா வடக்கு ராஜவீதி யிலுள்ள பெரிய மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போனாள்? -