பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 பூர்ணசந்திரோதயம்-4 இந்த வீட்டை நீ நன்றாகப் பார்த்துச் சொல். உன்னை நாற்காலி யில் அடைத்தவர்களுடைய வீடு இது அல்லவா?’ என்றார்.

ஷண்முகவடிவு, ‘ஆம் அப்படிச் சொல்லித்தான் என்னை அழைத்துக்கொண்டு போனாள். நான் முதலில் வந்து இறங்கிய வீடு இதுதான். நிச்சயம்; சந்தேகமே இல்லை. அந்தப் பெண் பிள்ளை என்னைக்கொண்டுபோய்விட்டமாளிகை இதுவல்ல என்று உறுதியாகக் கூறினாள்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் பலவிதமான யூகங்களும் யோசனைகளும் செய்தவராய், சரி; இருக்கட்டும். நாம் ஒரு காரியம் செய்வோம். உன்னை அந்தப் பெண்பிள்ளை யாருடைய மாளிகையில் கொண்டுபோய்விட்டார்கள் என்பதை நான் முதலில் தெரிந்துகொண்டு அதன்பிறகு இந்த வீட்டாரிடம் பேசுவதே நல்லதென நினைக்கிறேன். வடக்கு ராஜவிதியில் அல்லவா அந்த மாளிகை இருந்ததாக நீ சொன்னாய். அந்த வீதியின் வழியாக நான் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன். நீ இரண்டு பக்கங்களிலும் கவனமாகப் பார்த்துக் கொண்டே வந்து அந்த மாளிகையின் அடையாளத்தைக் கண்டுபிடி. அது யாருடைய மாளிகை என்பதை நான் உடனே அறிந்து கொள்கிறேன். பிறகு நாம் இங்கே வந்து இவ்விடத்திலுள்ள மனிதரைக் கண்டு விஷயங்களை விசாரிக்கலாம்” என்றார்.

ஷண்முகவடிவு அந்த ஏற்பாட்டை ஒப்புக்கொள்ள, அவர் அவளை அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் பல வீதிகளையும் கடந்து வடக்கு ராஜவீதியை அடைந்து அதன் கிழக்குக் கோடியிலிருந்து மேற்கு முகமாக வரத் தொடங்கினார். அந்த வீதியின் வடக்குச்சாரியிலேதான் அந்த மாளிகை இருந்தது என்பது அந்த மடந்தைக்கு நன்றாக நினைவிருந்தது. ஆகையால், அவள் அந்தச் சாரியிலேயே தனது பார்வையைச் செலுத்திய வளாய் நடந்தாள். அவ்வாறு அவர்கள் சுமார் நூறு வீடுகளைக் கடந்து செல்ல அவ்விடத்தில் மருங்காபுரி ஜெமீந்தாரினது