பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O - பூர்ணசந்திரோதயம் - 4 தோட்டக்காரனையும் அவனது மனைவியையும் பிடித்து மிரட்டி உண்மையை வெகு சுலபத்தில் கண்டுபிடித்து விடுவார் என்ற பெரும் பயம் உண்டாகிவிட்டது. அதுவுமன்றி, இன்ஸ்பெக்டர் அந்த அநாமதேயக் கடிதத்தைத் தனது புருஷருக்குக் காட்டுவாரானால், அவர் உடனே தான்தான் அந்தக் கடிதத்தை எழுதி அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தவள் என்பதை உடனே உணர்ந்து, அந்த ஆத்திரத்தில் பவானியம்பாள் புரம் ஜெமீந்தாரை தான் அண்டாவில் வைத்துக் கொன்ற விவரத்தை வெளியிட்டு விடுவாரோ என்ற பெருந்திகிலும் கலவரமும் தோன்றி அவளது மனதை உழக்கிக் குடலைக் கலக்கின. அந்த மகாவிபரீதமான அபாய வேளையில் தான் என்னவிதமான தந்திரம் செய்வது என்பதை அறியாமல் அவள் இரண்டொரு நிமிஷநேரம் பதைபதைத்து அவ்விடத்திலேயே நின்றாள். தேகம் பதறியது. மனம் சோர்ந்து தத்தளித்தது. தான் தனது புருஷனைச் சிறைச்சாலைக்கு அனுப்பியபிறகு எவ்விதத் துன்பமும் இன்றி செளக்கியமாக இருக்கலாம் என்று நினைத்ததற்கு மாறாக பெருந்தீங்கு தனக்கு நேரப் போவதைப் பற்றி அவள் எண்ணாததெல்லாம் எண்ணிக் கலங்கினாள். தான் தனது கணவனைக் காட்டிக் கொடுத்த பாவமே தன்னைத் தொடர்ந்து அவ்வாறு பழிக்குப் பழி வாங்குகிறதோ என்ற எண்ணமும் தோன்றியது. கடிதங்களிலிருந்து தனது இரகசியமெல்லாம் வெளிப்பட்டுப் போகுமானால், அதனால் தான் தண்டனை அடையாவிட்டாலும், அதிலிருந்து ஏற்படும் மானக்கேடும், அபகீர்த்தியும் தலைகுனிவும் என்றென்றைக்கும் அழியாதனவாக இருக்கும் என்றும், தான் அதன்பிறகு உயிரை வைத்துக்கொண்டு வெளியில் வரவாவது, மனிதர் முகத்தில் விழிக்கவாவது முடியாமல் போய்விடும் என்றும் அவள் நிச்சயமாக நம்பினாள். தான் தனது பெரிய தந்தையின் சொல்லைக்கேட்டு, மகா புனிதவதியான வடிண்முகவடிவைக் கெடுக்க முயல்வதைக் கண்டு பொறாமல், தெய்வமே தன்மீது பழிவாங்க நினைக்கிறதோ என்ற யோசனை தோன்றி அவளது