பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பூர்ணசந்திரோதயம் - 4 வந்திருக்கிறார். இதோ இந்தக் கடிதங்களில் கொடுக்கப்பட்டி ருக்கும் விலாசத்தைப் பாருங்கள்’ என்று கூறியவண்ணம் தனது மடியிலிருந்த சில கடிதங்களை எடுத்து ஒன்றைப் பிரித்து அதற்குள் எழுதப்பட்டிருந்த விலாசத்தைக் காட்ட இன்ஸ்பெக்டர் அதை வாங்கி, கதவைத் திறந்த மனிதரிடம் காட்டினார். அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு நிரம்பவும் குழம்பிய மனதும் மாறுபட்ட முகமும் உடையவராய் இன்ஸ்பெக்டரை நோக்கி, ‘ஆம். கடிதத்தில் இந்த விலாசம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அந்தப் பெயருடைய பெண் இங்கே வந்ததுமில்லை; இப்போதும் அவள் இங்கே இல்லை. நீங்கள் வேண்டுமானால் உள்ளே

வந்து சோதனைபோட்டுப் பார்க்கலாம்’ என்றார்.

உடனே இன்ஸ்பெக்டர், ‘இந்த வீட்டில் சோமசுந்தரம் பிள்ளை என்று யாராவது இருக்கிறார்களா?’ என்றார்.

வீட்டுக்காரர், ‘யார்? யார்? சோமசுந்தரம்பிள்ளையா! அந்தப் பெயருடைய யாரும் இங்கே இல்லையே. இந்த வீடு தலைமுறை தலைமுறையாக எங்களுக்குச் சொந்தமானது. தாங்கள் மகாராஷ்டிர ஜாதியைச் சேர்ந்தவர்கள். பிள்ளை வகுப்பைச் சேர்ந்த மனிதர்கள் எப்போதும் இந்த வீட்டில் இருந்ததே இல்லை’ என்றார்.

இன்:- உங்களுடைய பெயர் என்ன?

வீட்டுக்காரர்:- என் பெயர்ச்ாமளராவ். இன்:- ஒகோ அப்படியா சரிதான். நீங்களும் இன்னும் யார் யாரும் இந்த வீட்டில் இருப்பது?

வீட்டுக்காரர்:- நானும் என்னுடைய அத்தையும்தான் இந்த வீட்டிலிருக்கிறோம். சுமார் ஐந்தாறு வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருக்கிறார்கள். அவ்வள்வுதான் வேறே யாருமில்லை. * . . .