பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 239 இன்:- ஒருவேளை உங்கள் வேலைக்காரிகளுள் யாருக்காவது இந்தக் கமலம் தெரிந்தவளாக இருக்கலாமோ?

வீட்டுக்காரர்:- அப்படி இருக்காது. ஏனென்றால், எங்களுடைய வேலைக்காரிகள் சாப்பாடு படுக்கை எல்லா வற்றையும் இவ்விடத்திலேயே வைத்துக்கொண்டு எப்போதும் இங்கேயே இருப்பவர்கள். ஆகையால், அவர்கள் வேறு எவரிடத்திலும் சிநேகம் வைத்துக்கொள்ள சந்தர்ப்பமே கிடைக்காது.

இன்:- உங்களுடைய அத்தையின் பெயர் என்னவென்பதைத் தெரிவிக்கலாமோ?

வீட்டுக்காரர்:- அம்மணிபாயி.

இன்:- ஒருவேளை அந்த அம்மாளுக்கு இந்தத் தகவல் ஏதாவது தெரிந்திருக்கலாம். தயை செய்து அவர்களைக் கொஞ்சம் இப்படிக் கூப்பிடுகிறீர்களா?

சாமளராவ்:- நாங்கள் இரண்டு பேரும் எப்போதும் இந்த வீட்டில் இருக்கிறவர்கள். ஆகையால் எனக்குத் தெரியாத புதிய விஷயம் அந்த அம்மாளுக்கு எப்படித் தெரிந்திருக்கப் போகிறது? அநேகமாய் அவர்களுக்கும் இந்த விஷயத்தில் ஒரு சங்கதியும் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், அவசியம் அவர்களிடம் தாங்கள் இந்த விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னால், நான் அவர்களை அழைக்கிறேன்.

இன்:-(கிலேசத்தோடு) என்னவோ பாவம் அறியாதவளான இந்தப் பெண் திக்குத்திசை தெரியாமல் தவிக்கிறது. அவர்களி டத்திலும் கேட்டுத்தான் பார்ப்போமே. ஒருவேளை தெய்வச் செயலாக அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஏதாவது தகவல் தெரியக்கூடாதா. எல்லாவற்றிற்கும் அவர்களைக் கூப்பிடுங் களேன். கேட்டுப் பார்க்கலாம்-’ என்றார்.

6 -