பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 243 கடிதங்களை அவள் இருக்குமிடத்தில் கொடுத்து விடுகிறார்கள். இதுதானா ஒரு சிரமமான காரியம்?’ என்றாள்.

இன்ஸ்பெக்டர், ‘அப்படியும் செய்திருக்கலாம். ஆனால் இன்னொரு விஷயமல்லவா. இந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளப்போகும் ஒரு யெளவனபுருஷர் இந்த ஊருக்கு வந்திருந்தாராம். அவர் இந்தக் கடிதத்தில் குறிக்கப்பட்டுள்ள விலாசத்துக்கு வந்து அவளைப் பார்த்ததாகக் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதமும் இதோ இருக்கிறது. அதற்கு எப்படி சமாதானம் சொல்லுகிறது?’ என்றார்.

அம்மணி பாயி, ‘அந்த மனிதரும் இப்போது இங்கே வந்திருக்கிறாரா? அவர் இதே வீட்டில் வந்து கமலத்தைப் பார்த்ததாகவா சொல்லுகிறார்? அவர் இருந்தால், என்னிடம் அழைத்துக்கொண்டு வாருங்கள். நான் அவரிடம் கேட்டுப் பார்க்கிறேன். அவர் ஒரு நாளும் என் வீட்டுக்குள் வந்திருக்க மாட்டார் என்பதை நான் நிச்சயமாகச் சொல்லுவேன். அப்படி அவர் இந்த விலாசத்தில் கமலத்தைப் பார்த்ததாக எழுதியிருந்தால், அதைப் பற்றி அவரையும் நேரில் வைத்துக் கொண்டு கேட்டாலன்றி உண்மை எப்படி விளங்கும்? யார் யாரோ செய்த காரியங்களுக்கெல்லாம் நான் எப்படிசமாதானம் சொல்லமுடியும் ? அந்த மனிதரும் அன்னிய ஊர் மனிதர். திருவாரூரிலிருந்து வரும் வண்டிகள் தங்கும் வண்டிப் பேட்டைக்குப் பக்கத்தில் தபால் கச்சேரி இருக்கிறதல்லவா. அவர் ஊரிலிருந்து வந்து வண்டிப்பேட்டையில் இறங்கிய வுடனே, பக்கத்திலுள்ள தபால் கச்சேரிக்குப் போய் விசாரித்து இந்த விலாசம் எங்கே இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ள எண்ணி அங்கே போயிருக்கலாம்; போய் விசாரித்து, இந்தப் பக்கங்களுக்குக் கடிதம் பட்டுவாடா செய்யும் தபால்காரனைக் கண்டு பேசியிருக்கலாம். அவன் இந்த விலாசத்தில் யாரைத் தேடுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டிருக்கலாம். அவர்கமலம் என்ற பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி