பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 245 சில நாள்களுக்குப் பேசாமல் வீட்டிலிருந்து அசரப்போட்டு, ஒரு கடிதத்தில் இந்த மேல் விலாசம் எழுதி ரகசியமாக அதைத் தபாலில் போட்டுவிட்டு, மறுநாள் தபால்காரனோடு தொடர்ந்து தந்திரமாக வரும்படி யாரையாவது அனுப்பினால், அவன்.அதை இந்த வீட்டில் கொடுக்கிறானா இல்லையா என்பது தெரிந்து போகுமல்லவா. அதற்குமேல் வேறு தந்திரம் செய்து உண்மையைக் கிரகிக்கிறோம்’ என்றார்.

அம்மனிபாயி, “சரி, அப்படியே செய்யுங்கள். அதுதான் நல்லது. ஆனால் அவன் அந்தக் கடிதத்தை இங்கே கொடுத்தால், அதை நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும். அவன் அதை வேறே எங்கேயாவது கொடுத்துவிட்டால், அது உங்களுக்கு எப்படித் தெரியும். நீங்கள் துரத்திலிருந்துதானே பார்க்க முடியும். அதே தினத்தில் எங்கள் வீட்டுக்கு என் பேருக்கு வேறே ஏதாவதொரு கடிதம் தற்செயலாக வரலாம். அதை அவன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போகலாம். இதையெல்லாம் எப்படி நிச்சயமாக நாம் அறிய முடியும்? என்னவோ நீங்கள் பிரயத்தனம் செய்து பாருங்கள். நீங்கள்செய்யப்போகும் தந்திரங்களை எல்லாம் எங்களிடம் எதற்காகச்சொல்லுகிறீர்கள்? எங்களுக்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இது விஷயமாக எங்களுக்கு யாதொரு தகவலும் தெரியவே தெரியாது’ என்றாள். இன்ஸ்பெக்டர், “சரி, அவ்வளவுதூரம் நீங்கள் உறுதியாகச் சொல்லும்போது, நாங்கள் அதற்குமேல் சந்தேகப் படுவது ஒழுங்கல்ல; இந்தப் பெண் உங்களோடு நன்றாகப் பழகியிருப்பதாக ஒரே பிடிவாதமாய்ச் சொல்லுகிறபடியால் தான், நான் உங்களிடம் மேன்மேலும் சந்தேகமாகக் கேட்க நேர்ந்தது. அப்படியானால் நாங்கள் போகலாமல்லவா? இந்தப் பெண்ணை நீங்கள் இதற்குமுன் எப்போதும் பார்த்ததே இல்லையல்லவா? இவள் சொல்லுவது தவறுதானே?’ என்றார்.

அம்மணிபாயி, ‘ஆம். தவறுதான். நான் இவளை ஒருநாளும் பார்த்ததே இல்லை; இவளோடு பேசியதுமில்லை. இவள் ஏதோ