பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 மனதைக் கலக்கியது. அந்த மடக்கொடியைத் தான் வெல் வெட்டு மாடத்தில் தனிமையில் விடுத்து வந்து அதிகநேரமாய் விட்டது. ஆகையால், அவள் தன்னைப் பற்றி என்ன நினைத்துக்கொள்வாளோ என்றும் அவள் எண்ணினாள். மகா துன்பகரமான தனது மன நிலைமையில் தான் அவளிடம் சம்பாஷித்து அவளது மனதைத் தனது பெரிய தந்தையின் துர்நினைவிற்கு இணங்க மாற்றுவது சிறிதும் முடியாததாகத் தோன்றியது. அவளது மனதை மாற்றாமல் தான்சும்மா இருந்து விட்டதைப் பற்றித் தனது பெரிய தந்தை தன் மீது கோபம் கொள்வாரோஎன்ற அச்சமும் கவலையும் தோன்றி ஒருபுறத்தில் வருத்தத் தொடங்கின. ஆனால், தான் தனது பெரிய தந்தையினிடம் ஏதேனும் ஒரு பொய்யைச் சொல்லி ஏமாற்றி விடலாம் என்ற யோசனையும் தோன்றியது. அப்போது தான் எவ்விதமான தந்திரம் செய்து போலீஸ் இன்ஸ் பெக்டரிட மிருக்கும் அநாமதேயக் கடிதத்தை அபகரிப்பது என்ற சிந்தனையே அப்போது அவளது மனதைக் கவர்ந்து கொண்டது. கட்டாரித்தேவன் தனக்குப் பகைவனாகத் திரும்பாமல் தான் அவனிடம் நட்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் உண்டாயிற்று ஆகையால், அவள் உடனே ஒருவிதமான தீர்மானம் செய்துகொண்டாள். தான் இன்ஸ்பெக்டரோடு பேசியது கால் நாழிகை சாவகாசத்திற்கு அதிகம் இராது ஆகையால், அதற்குள் கட்டாரித் தேவன் தோட்டத்தைவிட்டுப் போயிருக்கமாட்டான் என்ற நினைவு உண்டானது. ஆகையால், தான் உடனே ஒடித் தான் அவனை விட்டுவந்த இடத்திலிருந்து பார்த்துக் கொண்டே தோட்டத்திற்கு ஒடி அதற்குள்ளும் அதன் வெளியிலும் தேடிப்பார்த்து அவனைக் கண்டுபிடித்து மறுபடி அவனுடன் தந்திரமாகப் பேசி, அவன் கேட்டுக் கொண்டபடி தான் இளவரசரிடம் சிபாரிசு செய்து அவனுக்கு மன்னிப்பு வாங்கிக் கொடுப்பதாக வாக்களித்து, அவனைத் தூண்டி, இன் ஸ்பெக்டரிடமிருக்கும் அநாமதேயக் கடிதத்தையும்