பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 249 வரையில் நீயும் எங்கேயாவது படுத்துத்துங்குவது முக்கியமான காரியம். என்னுடைய வீட்டுக்கு உன்னை அழைத்துக் கொண்டு போய்ப் படுக்கவைக்கலாம் என்று பார்த்தால், ஓர் இடைஞ்சல் இருக்கிறது. என் சம்சாரம் தன் தாய் வீட்டுக்குப் போயிருப்பதால், வீட்டில் வேறே பெண்பிள்ளைகள் யாரும் இல்லை. நான்மாத்திரம் வீட்டில் தனியாக இருந்து வருகிறேன். ஆகையால், உன்னை நான் அங்கே அழைத்துக் கொண்டு போவது ஒழுங்கல்ல. ஆகையால், உன்னை நான் மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கே அழைத்துக்கொண்டு போகிறேன். அவ்விடத்தில் நீ தனியான ஒர்அறையில் செளக்கியமாகப் படுத்திருக்கலாம். பொழுது விடிந்த பிறகும் நீ அங்கேயே மறைவான ஓரிடத்தில் இருக்க அனுகூலமாக இருக்கும் என்றார்.

அதைக்கேட்ட ஷண்முகவடிவு அவரது பெருந் தன்மையையும் நல்லொழுக்கத்தையும் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்து, அவரது பிரியப்படியே செய்யலாம் என்று மறுமொழி கூறினாள்.

அவ்வாறு பேசியபடி அவர்கள் நடக்க, அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த தெருவின் கடைசியில் ஒரு பெருத்த கூக்குரலும் ஆரவாரமும் உண்டாயின. அதை உணர்ந்துகொண்ட இன்ஸ்பெக்டர் கலகம் நடந்த திக்கில் உற்று நோக்கி உண்மையை உணர்ந்து கொண்டார். ஷண்முகவடிவோ அந்த அர்த்த ராத்திரியில் மகா பயங்கரமாகத் தோன்றிய அந்தக் கூக்குரலைக்கேட்டுப் பெரிதும் திகில் கொண்டு மான்போல மருண்டு அது என்னவாக இருக்குமென்று உற்று நோக்கினாள். “போலீஸ்காரநாய்களை வெட்டு குத்து, கொல்லு, உதை, அடி, துகை, கழுத்தை முறி” என்றும், ‘ஐயோ அப்பா! நாங்கள் ஒடிப் போய் விடுகிறோம். எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் எப்படியாவது அடித்துக் கொள்ளுங்கள்” என்றும் பலவாறான சொற்கள் வந்து அவர்களது காதில் பட்டன.