பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பூர்ணசந்திரோதயம்-4 அதைக்கேட்ட இன்ஸ்பெக்டரது தேகம் பதறியது. உண்மை இன்னதென்பது அவருக்கு உடனே பட்டுவிட்டது. அவர் பதறிப் போனவராய் ஷண்முகவடிவை நோக்கி, ‘அம்மா ஷண்முக வடிவு, அதோ பார்த்தாயா? அவ்விடத்தில் ஒரு பெரிய கலகம் நடக்கிறது. அங்கே இருந்து ஒர் ஊர்கோலம் வருகிறது. கலியாணத்துக்காகப் பெண்ணை அழைத்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு விரோதிகள் வழிமறித்து அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டுபோய் வேறொரு பிள்ளைக்குக் கட்ட உத்தேசித்திருக்கிறார்கள். இந்த விஷயமாக எங்களுக்கு ஒரு மனு வந்தது. அதற்காக நான் போலீஸ் ஜவான்களை அனுப்பியிருந்தேன். பெண்ணைபலாத்காரமாக எடுத்துப்போக வந்திருக்கும் கட்சிக்காரர்கள் போலீஸ்காரர்கள்மேல் கோபம் கொண்டு அவர்களை அடிக்கிறார்கள் போலிருக்கிறது. நான் சும்மா இருக்கக் கூடாது. நான் அவசரமாகப் போய் இன்னும் அதிக ஜவான்களை அழைத்துக்கொண்டு வந்து என்னுடைய ஆட்களைத் தப்ப வைக்க வேண்டும். நான் அவசரமாக ஒட வேண்டும். நீ என்னோடு ஓடிவர முடியாது. இதோ பக்கத்தில் இருக்கும் வீடுகளில் எதிலாகிலும் போய்க் கதவைத் தட்டி என் பெயரையும் நான் இருக்கச் சொன்னதாகவும் சொல்லிப் பொழுது விடிகிறவரையில் இருந்து காலையில் ஸ்டேஷனுக்கு வந்து சேர். உன் விஷயங்களை நாம் அதன்பிறகு கவனிக்கலாம்” என்று கூறிவிட்டு அவளது மறுமொழிக்காகக் காத்திருக்காமல் அவ்விடத்தைவிட்டு ஒரே ஒட்டமாகத் தலைதெறிக்க ஒடி ஒரு கணநேரத்தில் மறைந்து போய் விட்டார்.

அவரது சொற்களைக் கேட்ட ஷண்முகவடிவு அபாரமான அச்சமும் கவலையும் கொண்டு நடுநடுங்கலானாள். அந்த அர்த்த ராத்திரியில் நிர்மானுஷ்யமான ஒரு தெருவில் தான் விடப்பட்டதையும், தனக்கெதிரில் முரட்டு மனிதர்களான இருநூறு முந்நூறு மனிதர்கள் கைகலந்து சண்டையிட்டு மடிவதையும் காணவே, அவளுக்குக் குலைநடுக்கம் எடுத்தது.