பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 - பூர்ணசந்திரோதயம்-4 கட்சிக் காரர்கள் அந்தப் பெண்ணை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று வந்து கலகம் பண்ணுகிறார்களாம். அப்படி வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் அடியும் சண்டையுமாக இருக்கின்றன. அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு இந்தப் பக்கந்தான் வருகிறார்கள் போலத் தோன்றுகிறது. அதற்காகப் பயந்துதான் நான் இப்படி ஓடி வருகிறேன்’ என்றாள்.

உடனே அங்கிருந்த ஜனங்களில் ஆண்பிள்ளைகளான சிலர் நன்றாக வேடிக்கை பார்ப்பதற்காக சந்துக்கு வெளியில் போகப் புறப்பட்டனர். பெண்பாலார் எல்லோரும் சரேலென்று வீட்டிற்குள் நுழைந்து கதவுகளை மூடித் தாளிட்டுக் கொள்ளத் தொடங்கினர். ஷண்முகவடிவு தானும் யார் வீட்டிலாயினும் நுழைந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தவளாய், திறக்கப்பட்டிருந்த வீடுகளையெல்லாம் உற்றுப் பார்த்தாள். பெரிய சத்திரம் போலத் தோன்றிய ஒரு வீட்டின் வாசலில் கையில் ஒரு சிறிய விளக்கை வைத்துக்கொண்டு ஒரு கிழவி நின்று கொண்டிருந்ததை ஷண்முகவடிவு கவனித்து அவள்தான் சரியான மனிஷியென்று நிச்சயித்துக் கொண்டு அவளிடம் நெருங்கி, ‘அம்மா வீதியில் பெரிய சண்டை நடக்கிறது. இருநூறு முந்நூறு மனிதர்கள் தடிகள் வைத்து சண்டை போட்டுக்கொண்டு இந்தப் பக்கம் வருகிறார்கள். நீங்கள் இங்கே தனியாக நிற்பது சரியல்ல. நானும் அவர்களைக் கண்டுதான் பயந்து ஒடி வருகிறேன். என்னையும் நீங்கள் உள்ளே அழைத்துக் கொண்டுபோய்க் காப்பாற்ற வேண்டும்’ என்றாள்.

அந்தக் கிழவி ஷண்முகவடிவை ஏற இறங்கப் பார்த்து, ‘நீதான் கலியானப் பெண்போலிருக்கிறது. அவர்கள் செய்யும் குழப்பத்தில் நீ மெதுவாக இப்படி ஓடிவந்து விட்டாய் போலிருக்கிறது’ என்றாள்.

ஷண்முகவடிவு நிரம்பவும் கிலேசமும் நாணமும் அடைந்தவளாய், ‘இல்லையம்மா! நான் வழியோடு வந்தேன்.